» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநராட்சியில் மல்டிலெவல் பார்க்கிங் வசதி : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்க திட்டம்

வெள்ளி 16, நவம்பர் 2018 11:59:28 AM (IST)

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 2 இடங்களில் பல்வகை வாகன நிறுத்த முனையம் (மல்டிலெவல் பார்க்கிங்) கட்டும் பணி நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் அல்பி ஜான் வர்க்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சி மையப் பகுதியான பாளைரோடு மாநகராட்சி மைய அலுவலகம் அருகில் பழைய பேருந்து நிலையம், தனியார் காய்கனி மொத்த விற்பனை அங்காடி மற்றும் பூ மார்கெட் ஆகியன செயல்பட்டு வருகின்றன. மாநகர பகுதி பொது மக்கள் மற்றும் தூத்துக்குடி மாநகரை சுற்றியுள்ள சிறிய கிராமங்கள் ஆகியவற்றிலிருந்து வரும் பொது மக்கள் தங்கள் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில்  தினசரி வந்து ஜெயராஜ்ரோடு மற்றும் பாளைரோடு பகுதியில் சந்தைப்படுத்துதல் மற்றும் கொள்முதல் செய்தல் ஆகியன நடைபெற்று வருகின்றபடியால், மேற்படி பகுதி மிகுந்த  போக்குவரத்து நெருக்கடியில் இருந்து வருகிறது.

எனவே பொது மக்களின் நலன் கருதி தூத்துக்குடி மாநகராட்சி சீர்மிகுநகரம் திட்டத்தின் கீழ் பல்வகை வாகன நிறுத்த முனையம் ஒன்று ஜெயராஜ் ரோடு பூமார்கெட் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 2411 சதுர மீட்டர் பரப்பளவிலும், மற்றொன்று சிதம்பரநகர் மார்கெட் பகுதியில் (மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகில்)  மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 3470 சதுரமீட்டர் பரப்பளவிலும் புதிதாக கட்டப்படவுள்ளன.

மேற்கண்ட பல்வகை அடுக்கு வாகன நிறுத்தமுனையத்தினை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உத்தேசமாக ரூ12.00 கோடி மதிப்பீட்டில் மூன்று தளத்தில் 3906 சதுரமீட்டர் பரப்பளவில் ஜெயராஜ் ரோடு பூமார்கெட் பகுதியில் அமைக்கப்படவுள்ளது. அதில் தரைதளத்தில்  1038 சதுரமீட்டர் பரப்பளவில் நான்கு கடைகளுடன்,  இரண்டு கழிப்பறை வசதியுடனும், முதல்தளத்தில் 956 சதுரமீட்டர் பரப்பளவில் 12 கடைகளுடன், ஒவ்வொரு தளத்திலும் தலா இரண்டு கழிப்பறை வசதியுடன் இருதளத்தில் சேர்த்து மொத்தம் 110 இருசக்கரவாகன நிறுத்துமிட வசதியுடனும்,  3வது மற்றும் 4வது தளத்தில்  956 சதுரமீட்டர் பரப்பளவில் நான்கு சக்கர இலகுரக வாகனங்கள் 100 எண்ணம் நிறுத்தும் வசதியுடன் ஜெயராஜ் ரோடு பூமார்கெட் பகுதியில்  கட்டப்படவுள்ளது.

அதே போன்று சிதம்பரநகர் மார்கெட் பகுதியில் (மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகில்) பல்வகை அடுக்கு வாகன நிறுத்த முனையத்தினை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உத்தேசமாக ரூ15.33 கோடி மதிப்பீட்டில் மூன்று தளத்தில் 5620 சதுரமீட்டர் பரப்பளவில் அமைக்கப்படுவதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் மேற்படி வாகன நிறுத்துமிடத்திற்கு பொது மக்கள் தங்கள் வாகனங்களை இலகுவாக கொண்டு செல்ல ஒவ்வொரு தளத்திலும் சாய்வுதளம் அமைத்து வாகனம் ஏறுமிடம் ஒரு பக்கத்திலும், இறங்குமிடம் ஒரு பக்கத்திலும் கட்டப்படவுள்ளது. மேலும் பொது மக்கள் மற்றும் வயோதிகர்கள் ஒவ்வொரு தளத்திற்கும் செல்ல ஏதுவாக மின்தூக்கி (லிப்ட்) வசதியுடன், நடந்து செல்ல மாடிப்படிகளும் கட்டப்படவுள்ளது..

மேற்கண்ட பணிகள்  அனைத்தும் முடிவுபெற்றபின்னர்  மாநகரத்தின் மேற்படி பகுதியில் போக்குவரத்து நெருக்கடி குறைவதுடன், பொது மக்கள் தங்கள் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பாதுகாப்பான முறையில் நிறுத்த ஏதுவாக இருக்கும். மேற்படி திட்டம்  மாநகரப்பகுதி பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில்  இருக்கும் என மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

KANNAPPANNov 19, 2018 - 11:16:50 PM | Posted IP 172.6*****

ரயில்வே ஸ்டேஷன் அவசியம் மீளவிடனுக்கு மாத்தணும் அப்பதான் ஊர் வளர்ச்சி அடையும்

ALDRIN BLACIUSNov 17, 2018 - 08:43:53 PM | Posted IP 172.6*****

Vvd Singal பக்கத்துல மேம்பாலம் அமைத்தால் நன்றாக இருக்கும் போக்குவரத்து நெரிசல் குறையும் , மார்கெட் பக்கத்தில் போக்குவரத்து நெரிசல் மார்கெட் வேறு இடத்திற்கு மாற்றவும். V E road போக்குவரத்து நெரிசல் மிகுந்த அளவில் உள்ளன அங்கும் ஒரு திட்டம் வகுத்தால் நன்றாக இருக்கும்.

பால்ராஜ்Nov 17, 2018 - 08:02:08 PM | Posted IP 172.6*****

அய்யா அப்டியே மார்க்கெட் லாம் புதுசா கட்டி கொடுங்க கேட்டு போன vegetables லாம் சுத்தம் இல்லாம floor ல ரோடு ல கிடக்குது

AnandNov 17, 2018 - 02:45:58 PM | Posted IP 172.6*****

Super effort. Good scheme.

PRABHAKAR BENEDICTNov 16, 2018 - 09:36:35 PM | Posted IP 162.1*****

Very good scheme WELL BEGUN IS HALF DONE. Why not use the SAV School ground also for the Modern Bus Stand and the proposed Multi-level Car Park ? These two can be integrated together The Jeyaraj Road must be made as a Four-Lne road , together with Service Roads at both sides, to ease the traffic congestion.Push back the shops at the Corporation compound ( or remove them ), to widen the road.

ராஜாNov 16, 2018 - 08:15:49 PM | Posted IP 162.1*****

எல்லாம் சரி. பழைய பஸ்டாண்ட மாத்த வியாபாரிகள் எதிர்ப்பு...

அந்தோணி சாமி தூத்துக்குடிNov 16, 2018 - 08:09:23 PM | Posted IP 162.1*****

இப்பத்தான் நம் ஊர் படிபடியாக வளர்ச்சி அடைய போகிறது என்பது மகிழ்ச்சி அடைகிறேன்

தூத்துக்குடி மக்கள்Nov 16, 2018 - 06:21:59 PM | Posted IP 162.1*****

வளர்க்க தூத்துக்குடி

காதர்Nov 16, 2018 - 05:33:33 PM | Posted IP 162.1*****

ரோட்டை முதலில் ஒழுங்கா போடுங்க அப்புறம் மல்டி லெவல் பார்க்கிங் போடுங்க

ராமநாதபூபதிNov 16, 2018 - 03:47:00 PM | Posted IP 172.6*****

அருமையான முடிவு. திருநெல்வேலி சரவணாசெல்வரத்தினம் ஸ்டோர்ஸ் கடையின் பின் புறம் அமைக்கப்பட்டுள்ளது இது போன்ற வாகன நிறுத்துமிடம் தான். வாழ்த்துக்கள் அய்யா

M.sundaramNov 16, 2018 - 02:36:27 PM | Posted IP 172.6*****

Welcome for this scheme. it should be implemented in letter and spirit within the time schedule. Congratulation to the Commissioner for his innovative initiatives.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


Joseph MarketingNalam Pasumaiyagam

Anbu Communications

Black Forest Cakes

New Shape TailorsThoothukudi Business Directory