» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தொற்றாநோய் தடுப்பு பணிகள் ஆலோசனைக்கூட்டம் : ஆட்சியர் அறிவுரை

வெள்ளி 9, நவம்பர் 2018 8:21:49 PM (IST)




தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தொற்றா நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் தொலைபேசி சேவை நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோருடன், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தொற்றா நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம்; மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று (09.11.2018) நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்ததாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்து துறை அலுவலர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியார் கல்வி நிறுவனத்தினர்கள் தங்கள் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மழை காலங்களில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். 

மேலும், தங்கள் நிறுவனத்திலுள்ள மின்சார வயரிங்கள், மின் இணைப்புகள் ஆகியவை சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்திட வேண்டும். கழிவு நீர் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள கால்வாய்களில் உள்ள குப்பைகளை அகற்றப்பட்டு மூடிவைக்கவேண்டும். பள்ளியின் அனைத்து கட்டடிடங்களின் உறுதித்தன்மையை உறுதி செய்திட வேண்டும். எண்ணெய் நிறுவனங்கள் வடகிழக்கு பருவமழை காலத்தில் டீசல் மற்றும் பெட்ரோல் போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும். தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் வடகிழக்கு பருவமழை காலத்தில் தங்குதடையின்றி தொலைபேசி சேவை வழங்க வேண்டும். பருவமழை காலத்தில் மின்தடையின் காரணமாக தொலைதொடர்பு சேவையில் பாதிப்பு ஏற்படின் அதனை சரிசெய்ய ஏதுவாக தேவையான எண்ணிக்கையில் ஜெனரேட்டர்களை கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும். 

வடகிழக்கு பருவமழை காலங்களில் டெங்கு கொசு அதிகமாக உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. எனவே, தங்கள் பகுதியில் உள்ள சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்துக்கொள்வதோடு, பயன்படுத்தாத பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். கொசு உற்பத்தியாகும் வகையில் பொருட்களை சேமித்து வைத்திருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின்மீது அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களிடம் அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு மற்றும் கைகழுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். பள்ளிகளில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்து தேவையான விழிப்புணர்வு மாணவ, மாணவியர்களிடம் ஏற்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்தார். 

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மாநகராட்சி ஆணையாளர் அல்பி ஜான் வர்க்கீஸ், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜித் சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி. இணை இயக்குநர் (மருத்துவநலப்பணிகள்) பரிதா செரின், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.கீதாராணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர் மற்றும் அலுவலர்கள், தனியார் கல்வி நிறுவனத்தினர், தனியார் மருத்துவமனை பிரதிநிதிகள், எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள், தொலைபேசி நிறுவன பிரதிநிதிகள்; கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


crescentopticals




Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory