» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கந்தசஷ்டி விழாவிற்கு சென்ற அரசுஊழியர் உயிரிழப்பு

வெள்ளி 9, நவம்பர் 2018 6:34:12 PM (IST)

திருச்செந்துாரில் குளியலறையில் வழுக்கி விழுந்து கந்தசஷ்டி விழாவிற்கு வந்த அரசு ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி காலாங்கரை பகுதியை சேர்ந்த சுடலைமுத்து என்பவரது மகன் வெள்ளையன் (56). இவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் பம்ப் ஆபரேட்டராக வேலை செய்து வருகின்றார்.  திருச்செந்துாரில் நடைபெறும் கந்தசஷ்டி விழாவில் பங்கேற்பதற்காக திருச்செந்துார் சென்ற வெள்ளையன் அங்குள்ள லாட்ஜில் தங்கியுள்ளார். இன்று காலை குளியலறைக்கு சென்ற அவர் அங்கு எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்து படுகாயம் அடைந்தார். 

அவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருச்செந்துார் கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications
Joseph Marketing

New Shape Tailors

Nalam Pasumaiyagam


CSC Computer Education

Black Forest CakesThoothukudi Business Directory