» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் திமுக சார்பில் நிலவேம்பு கசாயம்: கீதாஜீவன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

வெள்ளி 9, நவம்பர் 2018 4:38:26 PM (IST)



தூத்துக்குடி நகரின் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. 

திமுக சார்பில் தூத்துக்குடி எஸ்ஏவி பள்ளியில் பகுதி செயலாளர் சுரேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு கீதாஜீவன் எம்எல்ஏ நிலவேம்பு கசாயம் வழங்கினார். இதுபோல் பிரையண்ட் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி பகுதி செயலாளர் பிபி ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு மாநகர செயலளார் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் என்பி ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் அருமைநாயகம், மாநகர இளைஞர் அணிச் செயலளார் வழக்கறிஞர் ஆனந்த கபேரியல், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ரமேஷ், வட்ட செயலளார்கள் சாரதி, மூக்கையா, சுரேஷ், நவநீதன், நிர்வாகிகள் ராஜா, மயிலேறும் பெருமாள், சுப்பையா, துரை பிரம்மநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதுபோல் தூத்துக்குடி 30வது வார்டு வண்ணார் முதல் தெருவில் திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். அண்ணாநகர், திரேஸ்புரம், சிவன்கோவில் தெரு, உட்பட பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals




Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD



New Shape Tailors



Thoothukudi Business Directory