» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிலிண்டர்களுக்கு கூடுதல் பணம் கொடுக்க வேண்டாம் : ஆட்சியர் அறிவிப்பு

வெள்ளி 9, நவம்பர் 2018 3:45:50 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு உருளை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, கூடுதல் பணம் செலுத்த தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடியில் ரூ.1008.50/- ஆகவும், கோவில்பட்டியில் ரூ.1007.00/- ஆகவும், கழுகுமலையில் ரூ.1015/- ஆகவும், கயத்தாரில் ரூ.1010/- ஆகவும், எட்டையபுரத்தில் ரூ.1007/- ஆகவும் மற்றும் சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.1025/- எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.1008.50/- எனவும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.1008.50/- எனவும், 01.11.2018 முதல் எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே நுகர்வோர்கள் எரிவாயு முகவர்களிடமிருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கு (14.2 முப) மேலே குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors

Joseph Marketing






Thoothukudi Business Directory