» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சர்கார் திரைப்பட விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது : முதல்வரை சந்தித்த பிறகு கடம்பூர் ராஜு அறிவிப்பு!

வெள்ளி 9, நவம்பர் 2018 3:30:02 PM (IST)

சர்கார் திரைப்பட விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது என்று செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்க்கார். கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தீபாவளியன்று இப்படம் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது. படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தியேட்டர் உரிமையாளர் சஙகம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, சர்கார் திரைப்படம் மறு தணிக்கை செய்யப்பட்டது. அதில், கோமளவள்ளி என்ற பெயர் இடம் பெறும் இடங்கள் ம்யூட் செய்யப்பட்டுள்ளன. விலையில்லா நலத்திட்ட உதவிகளை எரிக்கும் காட்சி நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கடம்பூர் ராஜு இன்று மதியம் ஆலோசனை நடத்தினார். 

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சர்க்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. மறு தணிக்கைக்கு பிறகு, படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டு அதற்கான பணிகளை முடித்துள்ளது. எனவே சர்கார் திரைப்பட சர்ச்சை முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம், இனியாவது திரைப்படம் ஓடும் இடங்களில், அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தாமல் இருப்பார்களா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

ரவிக்குமார்Nov 9, 2018 - 11:13:40 PM | Posted IP 162.1*****

டேய் தமிழ்நாட்ல போராடவேன்டியது நிரைய இருக்கு அத விட்டுப்புட்டு இந்த சர்கார் படத்துக்கு போய் இப்படி போராடுரிங்களே டா த்த்த்துதுதுது..... டேய் உங்க இஸ்டத்துக்கு டிஜிட்டல் பேனர கிளிக்கிருங்க எவலோபேரு உழைப்பு இருக்கு தேரியுமாடா... டேய் உங்க பேனர கிளிச்சா உங்களுக்கு கோபம் வரும்ல அதே மாதிரிதான்டா... எங்களுக்கும் நான் தளபதி விஜய் ரசிகன் டா...... உங்களால பேனர மட்டும்தான்டா கிளிக்க முடியும் போங்கடா.....

ராமநாதபூபதிNov 9, 2018 - 04:01:17 PM | Posted IP 162.1*****

இந்த துணிவு கூட இல்லாமல் ஒரு விரல் புரட்சி எதுக்கு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Joseph Marketing

Nalam Pasumaiyagam

Anbu Communications

CSC Computer Education



New Shape Tailors



Thoothukudi Business Directory