» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 இளம்பெண்கள் மாயம்

வெள்ளி 9, நவம்பர் 2018 11:28:00 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 இளம்பெண்கள் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், மேலகரந்தை கிராமம், மறவர் காலனியைச் சேர்ந்தவர் கருத்தபாண்டி மகள் சசிகலா (22). இவர் பந்தல்குடியில் உள்ள மில்லில் வேலைபார்த்து வந்தார். கடந்த 6ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன்பின் வீடுதிரும்பவில்லையாம். பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லையாம். இதுகுறித்து புகாரின் பேரில் மாசார்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையுடன் தாய் மாயம் 

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி புதுமனை கிராமம், பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் மனைவி இலக்கியா (21). இந்த தம்பதியருக்கு முத்து சஞ்சனா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 5ம் தேதி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கணவருடன் கோபித்துக் கொண்டு, தனது குழந்தையுடன் இலக்கியா வீட்டை விட்டு சென்றுவிட்டாராம். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லையாம். அவரைப்பற்றி எந்த தகவலும் தெரியவில்லையாம். இதுகுறித்து புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண் மாயம் 

தூத்துக்குடி ராஜபாண்டி நகரைச் சேர்ந்தவர் முருகன் மகள் பொன் இசக்கி (19). திருப்பூரில்  உள்ள ஆலையில் வேலைபார்த்து வந்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊருக்கு வந்தாராம். பின்னர் விடுமுறை முடிந்து சென்ற அவர் வேலைக்குச் செல்லவில்லையாம். திடீரென அவர் மாயமாகிவிட்டார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் தெரியவில்லையாம். இகுறித்து அவரது தாயார் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து

அருண்Nov 11, 2018 - 12:19:18 PM | Posted IP 162.1*****

பருவ மயக்கம் பாழ்ப்படுத்துகிறது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals






Joseph Marketing

New Shape Tailors



Thoothukudi Business Directory