» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கொலை போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்

வெள்ளி 9, நவம்பர் 2018 11:12:08 AM (IST)

தூத்துக்குடியில் கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரை கணவரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி முத்தையாபுரம் பொன்பாண்டி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (45). இவருக்கு தமிழரசி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் குடும்பதகராறு காரணமாக தமிழரசி கணவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் பாலமுருகன், சாந்தி (40) என்ற பெண்ணை 2வது திருமணம் செய்து அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். சாந்தி ஏற்கனவே திருமணமானவர், கணவர் இறந்து விட்டார். அவரது மகனை பாலமுருகன் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை சாந்தி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெளியான தகவல்: சாந்தியின் வங்கி கணக்கில் இருந்த ரூ.11 ஆயிரம் பணத்தை தனது மககனுக்கு கொடுத்துவிட்டாராம். இதுகுறித்து பாலமுருகன் கேட்டபோது ஏடிஎம் எண்ணை தொலைபேசியில் கேட்டு ஆன்லைனில் யாரோ மோசடியாக பணத்தை எடுத்துவிட்டதாக அவர் பாலமுருகனிடம் நாடகமாடினாராம். மேலும், சாந்திக்கு  வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று பாலமுருகனுக்கும் சாந்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாலமுருகன் சாந்தியை அடித்துக் கொலை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தலைமறைவாக உள்ள பாலமுருகனை தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து

அருண்Nov 10, 2018 - 11:33:27 PM | Posted IP 172.6*****

நாய் மாதிரி கண்டவனோடலாம் செக்ஸ் வெச்சுக்கிட்டா இப்படித்தான்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


Joseph Marketing

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD






Thoothukudi Business Directory