» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆவின் பால் வேன் மோதி டீ மாஸ்டர் பலி: டிரைவர் கைது

வெள்ளி 9, நவம்பர் 2018 10:54:11 AM (IST)

தூத்துக்குடியில் பால் வேன் மோதி டீ மாஸ்டர் பலியான சம்பவம் தொடர்பாக வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், செக்காரகுடி அருகே உள்ள கேபி தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் சுடலைமுத்து மகன் மாரியப்பன் (50). இவர், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள டீக்கடையில் மாஸ்டராக வேலைபார்த்து வந்தார். நேற்று காலை வேலைக்கு வரும் போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து மத்தியபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மாரியப்பன் மீது ஆவின் பால் வேன் மோதியது தெரியவந்தது. இது தொடர்பாக வேன் டிரைவர் அந்தோணியார்புரத்தைச் சேர்ந்த பிச்சுமணி மகன் மாரியப்பன் (37) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors

crescentopticals


Joseph Marketing

CSC Computer Education



Thoothukudi Business Directory