» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அனுமதியின்றி விளம்பரப் பலகை: மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் 4 பேர் மீது வழக்கு

வெள்ளி 9, நவம்பர் 2018 8:32:24 AM (IST)

காயல்பட்டினத்தில் காவல் துறை அனுமதியின்றி டிஜிட்டல் விளம்பரப் பலகை வைத்ததாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் 4 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம்,  காயல்பட்டினம் பேருந்து நிலையம் கிழக்குப் பகுதியில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து, விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருந்ததாம். இதற்கு காவல் துறையின் அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தப் பலகை போக்குவரத்துக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இருந்ததாம். 

இதையடுத்து ஆறுமுகனேரி காவல் துறையினர் அந்த விளம்பரப் பலகையை அகற்றினர். இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளான காயல்பட்டினம் மங்களவாடியைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் மந்திரம் (44), அதே பகுதியைச் சேர்ந்த சிவபெருமாள் மகன் பொன்ராஜ் (40), கீழ நெய்னார்தெரு மீரான் மகன் இதயத்துல்லா (50), அழகாபுரியை சேர்ந்த ஐகோட்டான் மகன் சக்திவேல் (35) ஆகியோர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Nalam Pasumaiyagam


Black Forest Cakes


New Shape Tailors


CSC Computer Education

Joseph Marketing



Thoothukudi Business Directory