» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்: அமைச்சர் ராஜலட்சுமி பேச்சு

வெள்ளி 9, நவம்பர் 2018 8:03:48 AM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அமைச்சர் ராஜலட்சுமி கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூரில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப் பாண்டியன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளரும், தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆவின் நிறுவன தலைவருமான என்.சின்னத்துரை, முன்னாள் யூனியன் தலைவர் காமாட்சி என்ற காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சருமான ராஜலட்சுமி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் அமைச்சர் ராஜலட்சுமி பேசியதாவது: முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தந்ததால் 2016 தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஓட்டப்பிடாரம் தொகுதி 2 லட்சத்து 20 ஆயிரம் வாக்காளர்களை கொண்டது. சங்கரன்கோவில் போன்று ஓட்டப்பிடாரத்தில் 7 முறை அ.தி.மு.க. வெற்றி பெற்று உள்ளது. கடந்த தேர்தலை விட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும். இவ்வாறு அமைச்சர் ராஜலட்சுமி கூறினார். .கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் தங்கமாரியம்மாள், ஓட்டப்பிடாரம் நகர செயலாளர் கொம்புமகராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக புதியம்புத்தூர் மெயின் பஜாரில் உள்ள எம்.ஜி.ஆர் உருவ சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


மக்கள் கருத்து

ஆப்Nov 9, 2018 - 03:26:46 PM | Posted IP 172.6*****

வாங்க சுத்தாத பேன் ஒன்று என்னிடம் இருக்கிறது.பரிசாக தருகிறேன்.

M.sundaramNov 9, 2018 - 10:33:10 AM | Posted IP 162.1*****

The where about the present MLA is not known to the voters of his contitutions. He hid nothing to Mudivaithanendal village during his tenure. Let him tell how many time he has visited Mudivaithanendal Panchayat? What is the morale right he has to approach the voters again?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors

Joseph Marketing

CSC Computer EducationThoothukudi Business Directory