» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடும்ப பிரச்சனை காரணமாக பெண் கொடூரக்கொலை : ஒருவருக்கு போலீஸ் வலை

வியாழன் 8, நவம்பர் 2018 8:47:37 PM (IST)

முத்தையாபுரத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக பெண்ணை கொடூரமாக கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பொன்பாண்டி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (45). இவருக்கு தமிழரசி என்ற மனைவியும் இருகுழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தமிழரசி, பாலமுருகனுடன் ஏற்பட்ட குடும்பதகராறு காரணமாக பிரிந்து சென்று விட்டார் . இதனால் பாலமுருகன், சாந்தி (40) என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. மூன்று குழந்தைகளையும் சாந்தி கவனித்து வந்துள்ளார். சாந்தியின் கணவர் இறந்து விட்டார்.

இன்று மாலை சாந்திக்கும், பாலமுருகனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் கோபமடைந்த பாலமுருகன் சாந்தியை கட்டையால் தாக்கி, அவர் மீது கல்லை போட்டதாக கூறப்படுகிறது. இதில் சாந்தி பலத்த காயமடைந்தார். இதை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி சுமார் 7.45 மணியளவில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய பாலமுருகனை தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTD



crescentopticals



Thoothukudi Business Directory