» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக சார்பில் மாணவ, மாணவியருக்கு பேச்சு போட்டி : கீதாஜீவன் எம்எல்ஏ., அறிவிப்பு

வியாழன் 8, நவம்பர் 2018 7:09:19 PM (IST)

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 110வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில்பள்ளி மாணவ – மாணவியருக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, கவிதை ஒப்புவித்தல் போட்டிகள் நடைபெறுகிறது என வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ., தெரிவித்துள்ளார்.

இது குறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ., வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது, திமுக தலைவர் ஸ்டாலின்  அறிவிப்புக்கு இணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் வருகிற 18.11.2018 ஞாயிறு அன்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வைத்து மாணவ – மாணவியருக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, கவிதை ஒப்புவித்தல் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இப்போட்டிகள் அனைத்திலும் 9, 10 மற்றும் 11, 12 ஆகிய வகுப்புகளில் பயிலும்  மாணவ – மாணவியர் பங்கேற்க தகுதியுடையவர்கள் ஆவர்.

பேச்சுப் போட்டிக்கான தலைப்பு (1) மொழிப்போர் களத்தில் அய்யாவும், அண்ணாவும், கலைஞரும் (2) பெரியார் - அண்ணா – கலைஞர் – தலைவர் ஸ்டாலின் ஆகிய இரண்டு தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் 5 நிமிடத்திற்கு மிகாமல் பேச வேண்டும்.  கட்டுரை போட்டிக்கு (1) திராவிட இயக்கமும், இட ஒதுக்கீடும். (2) காலத்தால் அழியாத கலைஞரின் வார்த்தைகள். ஆகிய இரு தலைப்புகளில் ஏதேனும் ஓரு தலைப்பில் 100 வரிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். பேப்பர் போட்டி நடைபெறும் அறையில் தரப்படும்.

கவிதை ஒப்புவித்தல் போட்டிக்கு, இணைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இரண்டு கவிதைகளில் ஏதேனும் ஒரு கவிதையை போட்டியில் ஒப்பித்தல் வேண்டும் இசையுடனோ, ஒப்பனை அணிந்தோ கவிதைகளை ஒப்பிக்கக்கூடாது. இக்கவிதை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கிடைக்கப்பெறாதவர்கள் மாவட்ட தி.மு.க அலுவலகமான தூத்துக்குடி கலைஞர் அரங்கில் பெற்றுக்கொள்ளளாம். 
     
போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெறும் மாணவ – மாணவியர் முதல் பரிசாக ரூ.10,000 இரண்டாம் பரிசாக ரூ.5,000 மூன்றாம் பரிசாக ரூ2500 ஆறுதல் பரிசாக ரூ.1000 வீதம் 10 பேருக்கும் வழங்கப்படும்.      இது தவிர போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவ – மாணவியருக்கும் மாவட்ட தி.மு.க சார்பில் பரிசுகள் வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரான நான் (கீதாஜீவன்) தலைமை  தாங்குகிறேன். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்  மதியழகன் வரவேற்புரை ஆற்றுகிறார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அம்பா சங்கர், பிரதிப், இம்மானுவேல், டேவிட் ராஜ், கருப்பசாமி, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அருண் சுந்தர், முத்துராமன், செல்வின்,  நிர்மல் ராஜ்,  சங்கர நாராயணன், ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஆனந்தகேபிரியேல் நன்றியுரை ஆற்றுகிறார். 

போட்டியில் வெற்றிபெற்ற மாணவ- மாணவியருக்கு தி.மு.க. மாநில இளைஞரணி  இணைச்  செயலாளர்  அசன் முகமது ஜின்னா மற்றும் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் ஆகியோர் பரிசுகள் வழங்க இருக்கிறார்கள். போட்டி நடுவராக திமுக தலைமை கழக பேச்சாளர் மணிமாறன் அறிவிக்கபட்டுள்ளார்.

மாவட்ட அளவில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பிடிக்கும் மாணவ – மாணவியர் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள். அதில் முதல் பரிசாக ரூ.25,000 இரண்டாம் பரிசாக ரூ.15,000 மூண்றாம் பரிசாக ரூ10,000 ஆறுதல் பரிசாக ரூ.5000 வீதம் 10 பேருக்கும் வழங்கப்படும். போட்டிகளுக்கான அழைப்பிதழ் கிடைக்காத மாணவ – மாணவியர் இதனையே அழைப்பாக ஏற்று தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன். மேலும் விபரங்களுக்கு 98421-66201, 94878-48442 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். என அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications




New Shape Tailors

Nalam Pasumaiyagam


Joseph Marketing

Black Forest Cakes

CSC Computer Education



Thoothukudi Business Directory