» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் விடுதிகள் கிடைக்காமல் பக்தர்கள் அவதி

வியாழன் 8, நவம்பர் 2018 6:48:59 PM (IST)

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் விரதமிருக்கும் பக்தர்களுக்கு விடுதி வசதியில்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக இன்று துவங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விரதம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் கடந்த 14.12.2017 அன்று திருச்செந்துார் கோவில் கிரிவலப்பாதை இடிந்து விழுந்தது. இதை சரி செய்ய கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி டிச 16 ம் தேதி வரை கோவிலில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. 

இதையடுத்து கோவில் நிர்வாகத்தில் உள்ள காட்டேஜில் 400 ரூம்களில் 308 தங்க வசதியற்றவை, மராமத்து செய்ய வேண்டுமென அக்கமிட்டி சிபாரிசு செய்தது. அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.ஓராண்டாகியுள்ள நிலையில் அங்கு எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. தற்போது மீதமுள்ள 93 ரூம்களில் உபயதாரர்களுக்கு 20, நன்கொடையாளர்களுக்கு 15, விஐபிகளுக்கு 8, அனைத்து துறை அதிகாரிகளுக்கு 20, அது போக பக்தர்களுக்கு 30 அறைகள் மட்டுமே கிடைத்துள்ளது. 

கந்தன் விடுதியில் 6 நாட்களுக்கு அரசு 3050 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளது. செந்துார் முருகன் குடிலுக்கு 16,050 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தனியார் விடுதிகளில் பேக்கேஜ் முறையில் 6 நாட்களுக்கு 20 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் வரை மிக அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு தற்காலிமாக 9 இடங்களில் டெண்ட் அமைத்துள்ளனர். ஒரு டெண்ட்டில் 500 பேர் தங்கலாமென கோவில் நிர்வாகம் கூறுகிறது. ஆக மொத்தம் 4500 பேர் தான் தங்க முடியும். வழக்கமாக 6000த்துக்கு மேற்பட்டாேர் கோவில் மற்றும் வளாக பகுதிகளில் விரதம் இருப்பார்கள். விடுதிகள் இல்லாத காரணத்தால் சுகாதார வசதி கேள்விக்குறியாகி விட்டது. இதனால் பக்தர்கள் சிரமமடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து

தமிழன்Nov 9, 2018 - 11:05:52 AM | Posted IP 162.1*****

மாவட்ட நிர்வாகமும், ஹிந்து அறநிலையத்துரையும் உடனடியாக பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph Marketing

crescentopticals



Thoothukudi Business Directory