» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் தற்கொலை

வியாழன் 8, நவம்பர் 2018 1:48:35 PM (IST)

மணியாச்சியில் மனைவி கோபித்து கொண்டு தாயார் வீட்டிற்கு சென்றதால் அவரது கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மணியாச்சி, கிழக்குத் தெருவை சேர்ந்த சண்முகவேல் என்பவரது மகன் பேச்சிமுத்து (31). இவர் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். தற்போது சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி குடித்துவிட்டு அவரது மனைவி முருகசெல்வியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதேபோன்று தீபாவளி அன்றும் குடித்துவிட்டு தகராறு செய்ததால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டாராம். 

இதனால் நேற்று இரவு தனது வீட்டில் தூக்குப் போட்டு பேச்சிமுத்து இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அவரது தந்தை சண்முகவேல்(60) கொடுத்த புகாரின் பேரில் மணியாச்சி காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

New Shape Tailors

Black Forest Cakes





Nalam Pasumaiyagam

CSC Computer Education

Anbu Communications



Thoothukudi Business Directory