» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கமல்ஹாசன் பிறந்தநாள் : அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்

வியாழன் 8, நவம்பர் 2018 1:16:16 PM (IST)
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் 64வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி கமல்ஹாசன் இரத்த தான கழகம் மத்திய அரிமா சங்கம் மற்றும் தூத்துக்குடி கிளை மன்றங்கள் இணைந்து ராஜா தலைமையில் நவம்பர் 7ம்தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. 34 நபர்கள் இரத்ததானம் வழங்கினர். கணேசன் தலைமையில் அழகேசபுரம், சுப்பிரமணி தலைமையில் தாளமுத்துநகர், சங்கர் தலைமையில் வ.உ.சி மார்க்கெட் ஆகிய இடங்களில் இனிப்புகள் வழங்கப்பட்டது.

விழாவில் சிறப்பு விருந்தினராக முருகன் செம்புலிங்கம், வட்டார தலைவர் ராய்ஸ்டன் சந்தனக்குமார், நாகராஜ், ஜார்ஜ், வழக்கறிஞர் செங்குட்டுவன் கலந்து கொண்டனர். மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர்கள் மணிகண்டன், நயினார், சிவகுமார், சுப்பிரமணியன், மதன், நியூட்டன், மூர்த்தி, மாரியப்பன், ஜான்சன் மணிராஜ், ரவி, சண்முகராஜா, செல்வம், சங்கர், கணேசன், ராமராஜா, மாரிகண்ணன், கோபி, பிரிட்டோ ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவை தூத்துக்குடி கமல்ஹாசன் இரத்ததான கழக தலைவர் ராஜா செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Anbu CommunicationsNew Shape TailorsCSC Computer Education

Joseph MarketingThoothukudi Business Directory