» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மின்வாரிய பொறியாளரின் வீட்டில் பைக்குகள் எரிப்பு? போலீஸ் விசாரணை

வியாழன் 8, நவம்பர் 2018 12:08:54 PM (IST)

குலசேகரன்பட்டினம் அருகே மின்வாரிய இளநிலை பொறியாளரின் வீட்டில் பைக், ஸ்கூட்டர் எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருகே வைத்தியலிங்கம்புரம், மேற்கு தெருவைச் சேர்ந்தவர் செல்வம் மகன் கருணாகரன் (44). இவர் படுக்கப்பத்து கிராமத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இவரது வீட்டின் முன் தனது பைக் மற்றும், மனைவியின் ஸ்கூட்டரை நிறுத்தியிருந்தாராம். இரு வாகனங்களும் நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. வாகனங்களுக்கு மர்ம நபர்கள் யாரேனும் தீவைத்தார்களா எனத் தெரியவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals

New Shape Tailors
Joseph Marketing

Thoothukudi Business Directory