» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பெண்ணிடம் ரூ.4லட்சம் நகை பறிப்பு: வீடுபுகுந்து மர்ம நபர்கள் இருவர் கைவரிசை!!

வியாழன் 8, நவம்பர் 2018 12:00:22 PM (IST)

தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவமனை செவிலியரிடம் ரூ.4லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மடத்தூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் வின்சென்ட் மனைவி கமலா (75), தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வந்த 2 மர்ம நபர்கள், குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். அப்போது அவர் தண்ணீர் எடுக்க வீட்டிற்குள் சென்றபோது, பின்தொடர்ந்து வந்த 2பேரும் கமலா அணிந்திருந்த 18பவுன் தங்கச் சங்கிலியை பறித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கமலா திருடன் திருடன் எனக் கூச்சலிட்டுள்ளார். 

ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். திருடர்கள் பறித்துச் சென்ற நகையின் மதிப்பு ரூ.4லட்சம் ஆகும். இதையடுத்து கமலா செல்போன் மூலம் மட்டக்கடையில் உள்ள தனது மகன் ஐசக் ஜெபகுமாருக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவரது மனைவி பிரிசில்லா சிப்காட் காவல் நிலைத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

New Shape Tailors

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals



Thoothukudi Business Directory