» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கொசு ஒழிப்பு பணி: ஆட்சியர் ஆய்வு

வியாழன் 8, நவம்பர் 2018 10:50:31 AM (IST)



தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில்  கொசு ஒழிப்பு பணிகளை  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி  வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சியின் மூலம் நடைபெற்று வரும் கொசு ஒழிப்பு மற்றும் மெகா தூய்மை பணிகளை  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சண்முகபுரம் வண்ணார் தெரு பகுதிகளில், மாவட்ட ஆட்சியர் வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்தார். மேலும், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடங்கள் மீது மாடிவரை ஏறிச் சென்று தண்ணீர் தேங்கியுள்ளதா, கொசு புழுக்கள் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார். 

தொட்டிகள் உள்ள தண்ணீரை காலி செய்து ஒவ்வொரு முறையும், பீளிசிங் பவுடர் வைத்து சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும் எனவும், கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பொது மக்களிடம் தெரிவித்தார். தூய்மை பணிகளையும், கொசு ஒழிப்பு பணிகளையும் விரைவாகவும், தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி துப்பரவு பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, மற்றும்  மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

சிவராம்Nov 8, 2018 - 11:58:24 AM | Posted IP 172.6*****

Thanks for your action

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD



crescentopticals


Joseph Marketing




Thoothukudi Business Directory