» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இடைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் : அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு

வியாழன் 8, நவம்பர் 2018 8:45:47 AM (IST)

விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

விளாத்திகுளம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பது குறித்த ஆலோசனை கூட்டம், விளாத்திகுளம் அருகே புதூர் யூனியன் சிவலார்பட்டி சமுதாய நலக்கூடத்தில் நேற்று நடந்தது. விளாத்திகுளம் தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான ராஜலட்சுமி, மாவட்ட செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது: தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலானது பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக வரலாம். அல்லது பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடைபெறலாம். எப்போது தேர்தல் நடந்தாலும் தயாராக இருக்கும் வகையில், அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் வார்டுவாரியாக வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய நாளில் இருந்து நடைபெற்ற 10 தேர்தல்களில் 8 முறை விளாத்திகுளம் தொகுதியிலும், 7 முறை ஓட்டப்பிடாரம் தொகுதியிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதிகள் அ.தி.மு.க.வின் கோட்டைகள் என்பதை பலமுறை நிரூபித்து உள்ளோம். இந்த தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஒரு லட்சத்துக்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிNov 8, 2018 - 05:26:41 PM | Posted IP 141.1*****

ஆட்சி மட்டும் இல்லன்னா இந்நேரம் கட்சியும் மெரினாவில் தான் புதைக்கப்பட்டு இருக்கும்

கண்ணாNov 8, 2018 - 02:44:09 PM | Posted IP 172.6*****

சும்மா காமெடி கேமடி பண்ணாதீங்க

TamilNov 8, 2018 - 10:21:25 AM | Posted IP 162.1*****

Kolai veriyarhalukkum, adimai adaku vaathinarhalukum corrupt porukkihalukkum vottu poda maattom......

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

CSC Computer Education

crescentopticals

New Shape Tailors
Thoothukudi Business Directory