» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆன்மீக இளைஞர் அணி சார்பில் ஆதரவற்றோர் இல்லங்களில் தீபாவளி சமுதாயப்பணிகள் வழங்கல்

புதன் 7, நவம்பர் 2018 6:59:32 PM (IST)மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆன்மீக இளைஞர் அணி சார்பில் ஆதரவற்றோர் இல்லங்களில் தீபாவளி சமுதாயப்பணிகள் வழங்கப்பட்டது.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் நிறுவனர் ஆன்மிக குரு அருள்திரு அடிகளார் அவர்களின் அருளாசியுடன் 32ம் ஆண்டு தீபாவளி சமுதாயப் பணிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நேசக்கரங்கள் இல்லம், புதிய நேசக்கரங்கள், பாசக்கரங்கள் முதியோர் இல்லம், சிதம்பரநகர் அன்னை கருணை இல்லம், எம்பவர் சமூக சேவை இல்லம், கதிர்வேல் நகர் ஆன்மாவின் அன்புக் காப்பகம், கூட்டாம்புளி அன்பு உள்ளங்கள், பெத்தானி பார்வையற்ற பெண்கள் இல்லம், ஆரோக்கியபுரம் தொழுநோய் இல்லம், கீழஅழகாபுரி பவுல் பார்வையற்ற பெண்கள் இல்லம், நரிக்குறவர் குடியிருப்பு மற்றும் தெருவோர ஏழைமக்கள் உள்ளிட்ட 1000 பேருக்கு 6 வகையான இனிப்பு பலகாரங்களும், 100 பேருக்கு புத்தாடைகள், வேஷ்டி சேலைகள், போர்வைகள் வழங்கப்பட்டது.

முன்னதாக சிதம்பரநகர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் தீபாவளி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில், மன்ற தலைவர் மணி, ஆன்மீக இளைஞர் அணி நிர்வாகிகள் வேலு, தனபால், ஆதிநாராயணன், பொன்காசிராஜா, கண்ணன், புதிய துறைமுகம் பாண்டி, வேம்புகிருஷ்ணன், சங்கர், வீரபுத்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சமுதாயப்பணி ஏற்பாடுகளை சக்திமுருகன் தலைமையில் ஆன்மிக இளைஞர் அணியினர் செய்திருந்தன‌ர்.


மக்கள் கருத்து

கர்ணராஜ்Nov 8, 2018 - 03:08:09 PM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள்

தம்பரஸ் பாலாஜிNov 8, 2018 - 10:08:58 AM | Posted IP 172.6*****

நண்பர் திரு முருகன் அவர்களின் நல்ல சேவைக்கு நல்வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் ஆன்மிக மக்கள் சேவை ஓம் சக்தி ஜெய் சக்தி ஆதிபராசக்தி என்றும் நமக்கு துணை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing

crescentopticalsThoothukudi Business Directory