» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் விபத்து: தலை தீபாவளி கொண்டாடிய புதுமாப்பிள்ளை பரிதாப சாவு!!

புதன் 7, நவம்பர் 2018 12:06:56 PM (IST)

கயத்தாறு அருகே பைக் விபத்தில் தலை தீபாவளி கொண்டாடிய புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள பருத்திகுளம் மேலத்தெருவை சேர்ந்த பூல்பாண்டி மகன் சின்னராஜா (28). கயத்தாறில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சீதாலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி 2 மாதம் தான் ஆகிறது. புதுமண தம்பதியான இவர்கள் நேற்று தலை தீபாவளி கொண்டாட கயத்தாறு அருகே சவலாப்பேரியில் உள்ள சீதாலட்சுமியின் உறவினர் வீட்டுக்கு சென்றனர். இந்நிலையில் நேற்று மாலை சின்னராஜா மட்டும் தன்னுடைய மோட்டார் பைக்கில் பருத்தி குளத்துக்கு சென்றார். 

அப்போது அவரது பைக், கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே சின்னராஜா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சின்னராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பற்றி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலை தீபாவளி கொண்டாடிய புதுமாப்பிள்ளை திருமணமான 2 மாதத்திலேயே உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

ராஜாNov 8, 2018 - 12:17:03 PM | Posted IP 172.6*****

பெரும் சோகம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors



Joseph Marketing


CSC Computer Education

Black Forest Cakes

Anbu Communications

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory