» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவ.13 உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு

சனி 27, அக்டோபர் 2018 9:14:01 AM (IST)

திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டு வரும் 13ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிவிப்பு: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி ஆலயம் கந்தர் சஷ்டி திருவிழா - சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வருகிற 2018-ம் ஆண்டு நவம்பர் 13-ம் நாள் நடைபெறுவதை முன்னிட்டு 13.11.2018 செவ்வாய்க் கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் 13.11.2018 அன்று அரசு தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ/மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. 

இது செலாவணி முறிவுச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாளல்ல. எனவே மாவட்டத்தில் உள்ள கருவூலகங்களும், சார்நிலை கருவூலகங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக 08.12.2018 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors

crescentopticals

Joseph Marketing

CSC Computer Education




Thoothukudi Business Directory