» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாட்ஸ் அப்பில் அவதூறு வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது

புதன் 24, அக்டோபர் 2018 8:35:00 AM (IST)

கோவில்பட்டியில் ஒரு சமுதாயத்தினர் குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பிய வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் வாலிபர் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தினசரி சந்தையில் வாழை இலை கமிஷன் கடை நடத்தி வருபவர் ச.செல்லத்துரை என்ற செல்வம் (40).  இவரது செல்பேசிக்கு வாட்ஸ் அப் மூலம் ஒரு சமுதாயத்தைப் பற்றி அவதூறாகப் பேசிய விடியோ பதிவு ஒன்று செப். 4ஆம் தேதி வந்ததாம். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து,  கல்லூரி மாணவர் ரஞ்சித்குமாரை (19) கைது செய்தனர். இந்நிலையில்  இவ்வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் அதே பகுதியைச் சேர்ந்த மாதவன் மகன் மதன்குமாரை (22) போலீசார்  நேற்று கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest Cakes


CSC Computer Education


Anbu Communications

New Shape Tailors


Joseph Marketing



Thoothukudi Business Directory