» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முறப்பநாட்டில் தாமிரபரணி மகாபுஷ்கர நிறைவு விழா

செவ்வாய் 23, அக்டோபர் 2018 8:43:09 PM (IST)




தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் தாமிரபரணி மகா புஷ்கர நிறைவு விழா இன்று நடைபெற்றது.

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் முக்கிய நதியான தாமிரபரணியை சிறப்பிக்கும் வகையில் தாமிபரணி மகா புஷ்கர விழா கடந்த அக்டோபர் 11 ம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது. இதில் பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் என சுமார் 11 லட்சம் பேர் புனித நீராடியுள்ளனர். குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் பாபநாசத்திலும், தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு கைலாசநாதர் திருக்கோயில் அருகே தாமிரபரணி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடினார்கள். சிறப்பாக நடைபெற்று வந்த தாமிரபரணி மகா புஷ்கர விழாவின் நிறைவுநாள் விழா இன்று தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கைலாசநாதர் திருக்கோயில் முன் தாமிரபரணி ஆற்றில் நடைபெற்றது. 

நிறைவு விழாவில் அதிமுக தூத்துக்குடி மாவட்டசெயலாளர் செல்லப்பாண்டியன் கலந்து கொண்டார். அவருடன் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பிச்சையா, தூத்துக்குடி மேற்கு பகுதி அதிமுக செயலாளர் முருகன், மேற்கு பகுதி துணை செயலாளர் ,கணேசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Nalam Pasumaiyagam


New Shape Tailors

CSC Computer Education

Anbu Communications

Joseph Marketing


Black Forest Cakes



Thoothukudi Business Directory