» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அயோடின் பற்றாக்குறை குறைபாடு தடுப்பு நிகழ்ச்சி : அன்னம்மாள் கல்லுாரியில் நடந்தது

செவ்வாய் 23, அக்டோபர் 2018 8:26:28 PM (IST)அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையமும் இணைந்து உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தின நிகழ்ச்சியை நடத்தியது.  இவ்விழாவில் கல்லூரி முதல்வர் ஜாய்சிலீன் சர்மிளா வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து தனியார் நுகர்வோர் அமைப்பின் திட்ட மேலாளர் செய்யது அகமது உப்பின் இன்றைய நிலைப்பாடு குறித்து விளக்கவுரை வழங்கினார். திருவாரூர் நுகர்வோர் குறைதீர் மன்ற உறுப்பினர் ரமேஷ் விழாவிற்கு தலைமை தாங்கினார். 

நுகர்வோர் கடமைகள் பற்றிய தகவல்களை தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் நுகர்வோர் குறைதீர் மன்ற உறுப்பினரும் எம்பவர் நுகர்வோர் கல்வி மையம் செயல் இயக்குநருமான சங்கர் எடுத்துரைத்தார். தூத்துக்குடியில் உள்ள உணவுக்காக விற்கப்படும் உப்பு மாதிரிகளை அதிகளவில் சேகரித்து அதிலுள்ள அயோடின் அளவுகளை கண்டறிந்த மாணவிகள் திருவேணி, சூரியமல்லிகா, வரோனிக்காபாபி ஆகியோருக்கு முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் உப்பு ஆலோசகர் சரவணன் வாழ்த்துரை வழங்கினார். நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளரும் அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி பேராசிரியையுமான சுதாகுமாரி நன்றியுரை கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


New Shape Tailors


Anbu Communications


CSC Computer Education

Joseph Marketing

Nalam PasumaiyagamThoothukudi Business Directory