» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மாற்றுத்திறனாளிகளுக்கான 25ம் தேதி சிறப்பு முகாம்

சனி 20, அக்டோபர் 2018 4:31:12 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 25ம் தேதி நடைபெற உள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில், 01.01.2019 தேதியினை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம்-2019 ஆனது 01.09.2018 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணியின் போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் மற்றும் முகவரி மாற்றம் ஆகிய பணிகள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வருகிறது. இப்பணி 31.10.2018 வரை நடைபெறும்.

படிவங்களின் விவரம்:-

படிவம் 6- புதியதாக பெயர் சேர்த்தல்

படிவம் 6ஏ - அயல்நாட்டு வாழ் இந்தியர்கள் பெயர் சேர்த்தல்

படிவம் 7- பெயர் நீக்கம்

படிவம் 8- திருத்தங்கள் செய்தல்

படிவம் 8ஏ - ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்தல்

மாற்றுத்திறானிகளின் நலத்தினை கருத்தில் கொண்டு அவர்களுக்கான சிறப்பு முகாம் ஒன்று 25.10.2018 (வியாழக்கிழமை) அன்று அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. அம்முகாமின்; போது 01.01.2019 அன்று 18 வயது முடிவடையும் மாற்றுத்திறனாளிகள் (அதாவது 31.12.2000 அன்றோ அல்லது அதற்கு முன்போ பிறந்தவர்கள்) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு மனுக்கள் அளிக்கலாம்.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள மாற்றுத்திறனாளிகள் பெயர் நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்கான சம்பந்தப்பட்ட படிவங்களையும் பூர்த்தி செய்து அன்று வழங்கலாம். வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வர இயலாத மாற்றுத்திறனாளிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கான வாக்குச்சாவடி மையத்தில் இதற்கென நியமிக்கப்பட்டுள்ள Designated Officers களிடமிருந்து படிவங்களை பெற்று, பூர்த்தி செய்த படிவங்களை மேற்படி அலுவலரிடமோ அல்லது தங்கள் பகுதிக்குரிய வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமோ (BLO) கொடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals

New Shape Tailors

CSC Computer EducationThoothukudi Business Directory