» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சபரிமலை தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் : ச.ம.க தலைவர் சரத்குமார் பேட்டி

சனி 20, அக்டோபர் 2018 3:28:08 PM (IST)



சபரிமலை தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என முறப்பநாடு புஷ்கர விழாவில் நீராடிய ச.ம.க. தலைவர் சரத்குமார் வலியுறுத்தினார். 

மகா புஷ்கர விழா தாமிரபரணி ஆற்றில் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. குரு தலமாக போற்றப்படும் முறப்பநாடு நதியில் மிக அதிகமான பக்தர்கள் நீராடி வருகிறார்கள்.  இந்நிலையில் முறப்பநாட்டில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் நீராடினார். அதன்பின்னர் கைலாசநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார். அவர் செய்தியாளர்  தெரிவித்ததாவது: "மகாபுஷ்கரத்தில் கலந்து கொண்டது  எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நதியின் புனிதத்தை உணர்ந்தும் இந்த பகுதியில் மிக  அதிகமான பக்தர்கள் நீராடுகின்றனர். 

இந்த நதியில் ஆண்டுதோறும் புஷ்கர விழா நடந்தாலும் சரி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்தாலும் சரி, 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்தாலும் சரி, பொதுமக்களின் ஊக்கத்துடன் கலந்துகொள்வது அவசியம்.  இதுபோன்ற விழாக்கள் நடைபெறும் போதுதான், மிக அதிகமான நலத்திட்டங்கள் செயல்படும். தற்போது கூட முறப்பநாட்டில் அரசு சார்பில் சாலை வசதிகளும், உடைமாற்றும் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது நதியை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. 

பொதுமக்களாகிய நாமும் அனைத்து நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டும். தண்ணீரை குடித்து விட்டு பாட்டில்களை ஆற்றில் வீசுவது, உடைகளை ஆற்றில் விடுவது, பிளாஸ்டிக் பொருட்களை ஆற்றில் விடுவது போன்ற பழக்கங்களை கைவிட வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாப்பது மக்களின் கடமையாகும். அரசும் மக்களோடு மக்களாக இணைந்து இயற்கை வளங்களை பாதுகாக்க உறுதுணையாக இருக்கும். சீமைக் கருவேலமரங்களை வெட்டி விற்பது முன்னொரு காலத்தில் தொழிலாக இருந்தது. 

ரஷ்யா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்த வேலை வாய்ப்பற்றவர்களுக்கு இது பயன்பட்டது. மேலும் அடுப்பு எரிப்பதற்கும் பயன்பட்டது. தற்போது அதற்கு மதிப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே கருவேலமரங்களை அகற்றும் பணியை துரிதமாக அரசு மேற்கொள்ள வேண்டும். புஷ்கரவிழாவை அரசுவிழாவாக கொண்டாட வேண்டிய அவசியமில்லை. புஷ்கர விழா இறைவனுக்காக கொண்டாடப்படுவது. அரசு அதற்கு உரிய பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளை செய்து கொடுத்தாலே போதுமானது.  

சபரி மலையை பொறுத்தவரை, ஆகமவிதிகளின் படி உருவாக்கப்பட்டிருக்கின்ற எந்தவித ஸ்தலங்களில் ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கின்ற பாரம்பரியத்தையும் நம்பிக்கையும் உடைக்கின்ற மாதிரி உள்ளது இந்த தீர்ப்பு. இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.அவருடன் மாநில துணை பொதுசெயலாளர் சுந்தர், மாநில கொள்கை பரப்பு செயலாளர் விவேகானந்தர், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் குருஷ் திவாகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் சாலமோன், நெல்லை மாநகர செயலாளர் சேவியர், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் வில்சன், இளைஞரணி யாகோபு, விவசாய அணி பரமசிவம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Nalam Pasumaiyagam

Black Forest Cakes


CSC Computer Education

Joseph Marketing

New Shape Tailors


Anbu Communications



Thoothukudi Business Directory