» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முறப்பாட்டில் நயினார்நாகேந்திரன், சரத்குமார் புனித நீராடல்

சனி 20, அக்டோபர் 2018 1:58:07 PM (IST)




முறப்பாட்டில் பாஜக மாநில துணைதலைவர் நயினார் நாகேந்திரன், சமக தலைவர் சரத்குமார் ஆகியோர் தாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு தாமிரபரணி நதியில் புனித நீராடினார்கள்.

திருநெல்வேலி தூத்துக்குடியின் ஜீவநதியான தாமிரபரணி நதியை சிறப்பிக்கும் வகையில் தாமிரபரணி புஷ்கர விழா கடந்த 12 ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.  பல்லாயிரக்கணக்கில் பொதுமக்கள் கலந்து கொண்டு தினமும் புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் பாஜக மாநில துணைதலைவர் நயினார் நாகேந்திரன் தாமிரபரணியில் புனித நீராடினார். அவருடன் பாஜக நிர்வாகிகள் புனித நீராடினார்கள். 

அது போல் சமக தலைவர் சரத்குமார் முறப்பநாட்டில் தாமிரபரணி நதியில் புனித நீராடினார். பின்னர் கோவிலில் சென்று வழிபட்ட அவர் அங்கிருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். அப்போது தென்மண்டல சமக செயலாளர் சுந்தர் மற்றும் கட்சி பிரமுகர்கள் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து

சாமிOct 21, 2018 - 07:11:09 PM | Posted IP 141.1*****

நதியை சிறப்பு செய்து தாமும் சிறப்புற்று இருக்கிறார்கள் -

rajaOct 21, 2018 - 12:42:34 AM | Posted IP 172.6*****

super

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


crescentopticals



Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory