» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துப்பாக்கிச்சூடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தீவிரம் : ஆவணங்களை சேகரிப்பு

வியாழன் 18, அக்டோபர் 2018 8:58:27 AM (IST)

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தூத்துக்குடியில் சி.பி.ஐ. அதிகாரிகள் 5–வது நாளாக நேற்று விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மே மாதம் 22–ம் தேதி ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர். 100–க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக சி.பி.ஐ. 15 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது. தொடர்ந்து சி.பி.ஐ. எஸ்பி சரவணன் தலைமையில் டிஎஸ்பி ரவி உள்ளிட்ட 16 சி.பி.ஐ. அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கடந்த 13–ம் தேதி முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 5–வது நாளாக நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். காயம் அடைந்தவர்கள் மற்றும் சம்பவ இடங்களில் இருந்த வீடியோ பதிவுகள் உள்ளிட்டவைகளை சேகரித்து உள்ளனர். அதே போன்று டிஎஸ்பி ரவி தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான ஏராளமான ஆவணங்களை சேகரித்து காரில் ஏற்றி எடுத்துச்சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals

Joseph MarketingThoothukudi Business Directory