» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலங்கை சிறையில் உள்ள தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரையும் விடுவிக்க நடவடிக்கை உறவினர்கள் மனு

வியாழன் 18, அக்டோபர் 2018 8:35:42 AM (IST)

இலங்கை சிறையில் உள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த 8 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அவர்களின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த அந்தோணி, ரூபின்சன், வில்பிரட், விஜய், ரமேஷ், ஜேசு, ஆரோக்கியம், கோரத்த முனியன், இசக்கிமுத்து ஆகிய 8 பேரும் ஒரு நாட்டுப் படகில் கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி பாம்பன் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில், இலங்கை கடற்படை 8 மீனவர்களையும் கைது செய்து அவர்கள் சென்ற படகை பறிமுதல் செய்தது. புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 8 மீனவர்களும் நீர்கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தூத்துக்குடி மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு இலங்கை கடற்படையினர் தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 8 மீனவர்களுக்கும் மூன்று மாதம் சிறைத் தண்டனையும், தலா ரூ. 60 லட்சம் அபராதமும் விதித்து இலங்கை கல்பிட்டி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பான தகவல் தூத்துக்குடியில் உள்ள அவர்களது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தூத்துக்குடி வடபாகம் நாட்டுப்படகு மீனவ பொது பஞ்சாயத்து நிர்வாகிகள் மற்றும் இலங்கை சிறையில் உள்ள 8 மீனவர்களின் உறவினர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் மனு அளித்தனர். இலங்கை சிறையில் உள்ள 8 மீனவர்களையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் மீதான சிறைத் தண்டனை மற்றும் அபராதத் தொகையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Anbu Communications

Joseph Marketing


Black Forest Cakes

New Shape TailorsCSC Computer EducationThoothukudi Business Directory