» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பருவமழையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : அரசு செயலாளர் வலியுறுத்தல்

வெள்ளி 12, அக்டோபர் 2018 7:56:31 PM (IST)


தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள அனைத்து வகையான, முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை  மேற்கொள்ளப்பட வேண்டும் என அரசு முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் அறிவுரை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட பேரிடர் மேலாண்மை கண்காணிப்பு அலுவலர், கைத்தறி,கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை அரசு முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட பேரிடர் மேலாண்மை கண்காணிப்பு அலுவலர். அரசு முதன்மை செயலாளர் தெரிவித்ததாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள அனைத்து வகையான, முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை  மேற்கொள்ளப்பட வேண்டும். வடகிழக்கு பருவமழை காலங்களில் பாதிக்கப்படும் பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க வேண்டும். மேலும், பாதுகாப்பு மையத்தில் தேவையான குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி  மாவட்டத்தில், கனமழையினால் பாதிப்பு ஏற்படும் 36 இடங்களை தொடர்ந்து ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும். மேலும், மழைக்காலங்களில் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை சார்ந்த அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

பொது மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள தேவையான குழுக்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். மழைக்காலங்களில் உடனடியாக அனைத்து அலுவலர்களையும் தொடர்பு கொள்ளும் வகையில் தங்களது சரியான கைப்பேசி எண்களை மாவட்ட நிர்வாகத்திற்கு அளித்திட வேண்டும். மேலும், மழைக்காலங்கிளில் துறை அலுவலர்கள் தங்களது பணிகளை ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என  தெரிவித்தார்.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்ட பேரிடர் மேலாண்மை கண்காணிப்பு அலுவலர் , அரசு முதன்மை செயலாளர்  தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புரம் மற்றும் பள்ளிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், சாலை வசதிகள் கழிப்பறை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் டாக்டர்.அல்பி ஜாண் வர்க்கீஸ் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்வீரப்பன், சார் ஆட்சியர் பிரசாந்த் உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, வருவாய் கோட்டாட்சியர்கள் விஜயா (கோவில்பட்டி), கோவிந்தராசு (திருச்செந்தூர்), உதவி இயக்குநர்கள் (பேரூராட்சிகள்) மாகின் அபுபக்கர், (ஊராட்சிகள்) உமா சங்கர், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், நகராட்சி ஆணையர்கள், அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education



Nalam Pasumaiyagam

Black Forest Cakes


New Shape Tailors

Anbu Communications



Thoothukudi Business Directory