» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிறிஸ்தவ பள்ளியில் மாலை அணிந்த மாணவர்கள் வெளியேற்றம் : தூத்துக்குடியில் பரபரப்பு

வெள்ளி 12, அக்டோபர் 2018 7:32:30 PM (IST)


தூத்துக்குடி கிறிஸ்தவ பள்ளியில் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை அணிவித்து வந்த மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதால் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.

மைசூர் தசராவிற்கு அடுத்தபடியாக லட்சகணக்கில் பக்தர்கள் கூடும் இடம் குலசை முத்தாரம்மன் கோவிலாக‌ உள்ளது. தசரா விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி மாலை அணிந்து விரதமிருந்து வருகின்றனர். தூத்துக்குடி சின்னக்கோவில் வளாகத்தில் உள்ள‌ பள்ளியில் படிக்கும் மாணவர்கள் குலசைக்கு மாலை அணிந்து பள்ளிக்கூடத்திற்கு சென்றார்களாம். அவர்களை பள்ளி நிர்வாகம் வலுக்கட்டாயமாக பள்ளியிலிருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது. 

இது குறித்து, தகவலறிந்த தூத்துக்குடி மாநகர இந்து  முன்னணி நிர்வாகிகள் ராகவேந்திரா தலைமையில் பெற்றோர்களுடன் அந்த பள்ளியை முற்றுகையிட்டனர். இதனையடுத்து பள்ளி நிர்வாகிகள் இந்து முன்னணி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர், தலைமை ஆசிரியர், மாலை அணிவித்த மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க சம்மதித்தார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 


மக்கள் கருத்து

publicOct 13, 2018 - 10:40:45 AM | Posted IP 162.1*****

முதலில் நம்முடைய மத வாத திமிரு தனத்தை விட்டு விட்டு செயல் பட்டாள் நம் நாடு முன்னேறும்

indianOct 13, 2018 - 10:29:30 AM | Posted IP 141.1*****

இனி நம் குழந்தைகளை இந்து பள்ளியில் மட்டுமே சேர்க்க வேண்டும். அப்போது தான் கிறிஸ்துவ பள்ளிகள் மூடும் நிலை ஏற்படும் . பள்ளி கல்வி துறை என்ன செய்து கொண்டு இருக்கிறது

இந்த கிருஸ்துவ பள்ளியில் இனிமேல் நம் குழந்தைகளை சேர்ப்பதை தடுக்க வேண்டும் . இல்லை என்றால் இது Oct 13, 2018 - 05:23:05 AM | Posted IP 162.1*****

இந்த கிருஸ்துவ பள்ளியில் இனிமேல் நம் குழந்தைகளை சேர்ப்பதை தடுக்க வேண்டும் . இல்லை என்றால் இது போன்று பிரச்சனைகள் அதிகம் நடக்க வாய்ப்பு உள்ளது ப்ளஸ் பொல்லொவ் போர் ஆல் தவ் கிறிஸ்டின் ஸ்கூல் போர் எக்சாம்ப்லே ...டோன்ட் கோ போர் ஹோலி கிடோஸ் ஸ்கூல்; அண்ட் இதர குட் கிறிஸ்டின் ஸ்கூல்;

தேவகுமார். ந.Oct 13, 2018 - 12:37:31 AM | Posted IP 172.6*****

கண்டிக்கத்தக்கது அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கைது செய்யப்படவேண்டும்.

ம.சக்திவேல்Oct 12, 2018 - 10:11:43 PM | Posted IP 172.6*****

இந்த கிருஸ்துவ பள்ளியில் இனிமேல் நம் குழந்தைகளை சேர்ப்பதை தடுக்க வேண்டும் . இல்லை என்றால் இது போன்று பிரச்சனைகள் அதிகம் நடக்க வாய்ப்பு உள்ளது .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors
crescentopticals

Thoothukudi Business Directory