» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் ஸமார்ட் வகுப்பறை: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு

வெள்ளி 12, அக்டோபர் 2018 6:02:21 PM (IST)தூத்துக்குடியில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஸமார்ட் வகுப்பறையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் நிகழ்ச்சி, சிறப்பு தேவையுள்ள குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை சந்தித்து பூங்கொத்து மற்றும் பழவகைகளை வழங்கும் நிகழ்ச்சி, Smart Class வகுப்பில் மாணவ, மாணவிகளிடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி, தூத்துக்குடி, பழைய பேருந்து நிலையத்தில் குப்பைகளை அகற்ற பொது மக்களிடம் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகள் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் இன்று (12.10.2018) நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு தூய்மை பாரத இயக்கம் குறித்த உறுதி மொழியினை வாசித்தார். இதனை பின் தொடர்ந்து அனைத்து அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உறுதி மொழியினை எடுத்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் அவர்களின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.இராஜகோபால்,  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா, மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.அல்பிஜான் வர்க்கிஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு ஆளுநர் தூய்மை பாரத இயக்கம் நிகழ்ச்சியில் பேசியதாவது: அரசு தமிழ் நாட்டினை தூய்மை படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்துக் கொள்வதோடு, திறந்த வெளியில் குப்பைகள் கொட்டுவதை தவிர்ப்பதற்காகவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே பள்ளி மாணவ, மாணவியர்கள்  தூய்மை பாரத இயக்கம் குறித்து பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர்களிடம் விழிப்புணர்வு ஏறிபடுத்திட வேண்டும். மேலும் தங்களது வீடு மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள பகுதிகளை தூய்மையாக வைத்துகொண்டு தூத்துக்குடி மாவட்டம் தூய்மையில் முதல் மாவட்டம் என்ற பெருமை ஏற்படுத்திடும் வகையில் தூய்மை பணிகளில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.

முன்னதாக, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணிகளுக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.91.80 இலட்சம் மதிப்பில் புதியதாக வாங்கப்பட்ட 17 குப்பை சேகரிக்கும் நவீன வாகனங்களை; கொடியசைத்து துவக்கி வைத்து, சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் புரட்சியர் எம். ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தினை ஆய்வு செய்தார்.

மேலும் தமிழ்நாடு ஆளுநர் பாத்திமா நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து மருத்துவர்களிடம் நோய்களிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்கள். அதனை தொடர்ந்து தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகையில் மாவட்டத்தில் நடைபெற்ற மற்றும் நடைபெற்று கொண்டிருக்கும் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் காணொளி நிகழ்ச்சி கூட்டம் நடைபெற்றது. மேலும் அரசியல் கட்சி பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் கோரிக்கை மனு அளிக்க வந்தவர்கள், ஆகியோர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள். இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன், சார் ஆட்சியர் பிரசந்த், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, திட்டஅலுவலர் மகளிர் திட்டம் ரேவதி, உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing
Thoothukudi Business Directory