» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு : உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

வெள்ளி 12, அக்டோபர் 2018 5:35:39 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிஐ விசாரிக்குமாறு மதுரை உயர் நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், விசாரணையை சிபிஐக்கு மாற்றி கடந்த ஆகஸ்ட் மாதம் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, தூத்துக்குடி வன்முறை சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து சென்னை பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் இயங்கிவரும் சிபிஐ புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், ஸ்டெர்லைட் வன்முறை சம்பவம் தொடர்பாக புதிதாக 12 பிரிவுகளின்கீழ் கடந்த திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

அதேவேளையில், இந்த வழக்குத் தொடர்பாக தமிழக போலீசார், ஏற்கெனவே விசாரணை செய்த நபர்களிடமும், வழக்கில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களிடமும் சிபிஐ அதிகாரிகள் முதல்கட்டமாக விரைவில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக சிபிஐ சிறப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், தூத்துக்குடியில் முகாமிட்டு ஓரிரு நாள்களில் விசாரணையை தொடங்குவார்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில் துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிஐ விசாரிக்குமாறு மதுரை உயர் நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வெள்ளியன்று தாக்கல் செய்ப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவில், இந்த வழக்கை விசாரிப்பதற்கு தமிழக காவல்துறை முழுத் தகுதி பெற்ற அமைப்பு என்றும், எனவே மதுரை உயர் நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவானது விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 


மக்கள் கருத்து

கணேஷ்Oct 13, 2018 - 01:02:00 AM | Posted IP 172.6*****

டவர் மீது ஏறிய போராட்டம் யாரால் துவக்கப்பட்டது? சிபிஐ விரைவில் விசாரனை .....

சிவராம்Oct 13, 2018 - 12:59:26 AM | Posted IP 172.6*****

அதிமுக பிரமுகர்கள், தூத்துக்குடி முக்கிய புள்ளிகள் சிலர் சிக்குகிறார்கள். மடியில் கனம் . வழியில் பயம்.

ஆப்Oct 12, 2018 - 08:20:48 PM | Posted IP 162.1*****

சிபிஐ விசாரிச்சா கலவரத்தை உருவாக்கினவர்களின் குட்டு வெளிப்பட்டுவிடும் என்ற பயம் வந்துவிட்டது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu CommunicationsJoseph Marketing

Nalam Pasumaiyagam

New Shape Tailors

CSC Computer Education

Black Forest CakesThoothukudi Business Directory