» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழக ஆளுநரிடம் தூத்துக்குடி மக்கள் மனு அளிப்பு

வெள்ளி 12, அக்டோபர் 2018 4:52:32 PM (IST)தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விவகாரம் உட்பட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி தமிழக ஆளுநரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். 

தூத்துக்குடியில் வருகை தந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சுற்றுலா மாளிகையில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். அவரிடம் 322 மனுக்கள் வழங்கப்பட்டது. இதில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி நடிகர் காசிலிங்கம், நாம் தமிழர் கட்சி வியனரசு ஆகியோர் மனு அளித்தனர். ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று ஆலையின் ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மேலும், வேலைவாய்ப்பு, பட்டா மாற்றம் போன்றவை தொடர்பாக பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். 

மேலும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி ரூ.100 மற்றும் ரூ.5 நாணயங்கள் வெளியிட வேண்டும் என்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக் குழு சார்பில் வக்கீல் செங்குட்டுவன், பாலகிருஷ்ணன், ரத்தினம், மோகன் ஆகியோர் மனு அளித்தனர். ராஜீவ் கொலையாளிகளை தூக்கிலிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் பிரமுகர் அய்யலுச்சாமி மனு அளித்தார். ராஜீவ் படுகொலையின் போது உயிரிழந்த 14பேரின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி வி.பி.ஜெயகுமார் மனு அளித்தார். மேலும், மினி சகாயபுரம், லயன்ஸ் டவுண்  ஆகிய பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என முன்னாள் கவுன்சிலர் கோல்டன் மனு அளித்தார். 

மேலும், 34வது வார்டு பி அன் டி காலனி, கோக்கூர், ஆசீர்வாத நகர், முத்துநகர் ஆகிய பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அதிமுக பிரமுகர் சந்தானம் மனு அளித்தார். தூத்துக்குடி ரயில் நிலையத்தை மீளவிட்டானுக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி தங்கம் வெள்ளி வணிகர் சங்கம் சார்பில் தலைவர் சிலுவை மனு அளித்தார். சுதந்திரபோராட்ட தியாகி சண்முகசெட்டியார் மகள் இந்திரா தனக்கு நிறுத்தப்பட்ட தியாகி வாரிசு பென்ஷனை மீண்டும் வழங்கக் கோரி மனு அளித்தார். ஆம்னி பஸ்களின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதால் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் அற்புதராஜ் மனு அளித்தார். ஆளுநர் சுமார் 2 மணி நேரம் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதையொட்டி அப்பகுதியல் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கடுமையான சோதனைகளுக்கு பின்னரே பொதுமக்கள் ஆளுநரை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டனர். 


மக்கள் கருத்து

tamilanOct 12, 2018 - 08:32:05 PM | Posted IP 172.6*****

கொடுத்த மனுவை ஆளுநர் படிப்பாரா?

கே.சண்முகராஜாOct 12, 2018 - 07:15:43 PM | Posted IP 141.1*****

ஐயா நானும் இந்த மனுஅளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டடேன் , எனது நில பட்டாவில் தவறான பெயர் உள்ளது அதனை நீக்கம் செய்யவேண்டி கடந்த இருண்டரை வருடங்கலாக தாடி வளர்த்து போராடி வருகிரேன், எனது மனுவின் நகலை தங்களது ஈமெயில்ளுக்கு அனுப்பியுள்ளேன் எனது சோக கதையையும் பதிவு செய்யும்படி தங்களை மிகவும் பணிவோடு வேண்டி கேட்டுக்கொள்ளுகிறேன், என்னை மதித்து என்னிடம் பேசிய தங்களுக்கும் அந்த பெரியவருக்கும் நன்றிகள் கோடி

கே.சண்முகராஜாOct 12, 2018 - 07:00:06 PM | Posted IP 162.1*****

ஐயா , நானும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டேன் பட்டா தவறுதலான பெயர் நீக்கம் வேண்டி மனு செய்திருந்தேன் எனது மனுவின் நகலை உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்பியுள்ளான் எனது பரிதாபககதையையும் பதிவு செய்யும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றிகள் கோடி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

Black Forest Cakes


Nalam Pasumaiyagam

Anbu Communications

CSC Computer EducationNew Shape TailorsThoothukudi Business Directory