» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மேம்பாலம் பணி முடியும் வரை டோல்கேட்டில் தள்ளுபடி : உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 12, அக்டோபர் 2018 11:00:26 AM (IST)
துாத்துக்குடி மீளவிட்டானில், மேம்பாலப் பணி முடியும் வரை, புதுார் பாண்டியாபுரம் டோல்கேட்டில் பாதி கட்டணம் வசூலிக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
துாத்துக்குடி, மீளவிட்டான் பால்ராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:மதுரை - துாத்துக்குடி நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக, துாத்துக்குடி, மீளவிட்டானில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி, 2014ல் துவங்கியது.திட்டமிட்டபடி, 2015ல் பணி முடிந்திருக்க வேண்டும்; தாமதம் ஏற்பட்டுள்ளது. விபத்துகள் ஏற்படுகின்றன. மேம்பால பணியை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, மார்ச்சில் விசாரணைக்கு வந்த போது, சீரமைக்கும் வரை, துாத்துக்குடி அருகே, புதுார் பாண்டியபுரம் டோல்கேட்டில் பாதி கட்டணம் வசூலிக்க, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் கடந்த 9ம் தேதி இந்த மனு மீது விசாரணை நடந்தது. அப்போது நீதிபதிகள், எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் அமர்வு, என்.எச்.ஏ.ஐ., மற்றும் ரயில்வே நிர்வாகம் ஓராண்டிற்குள் மேம்பாலப் பணியை முடிக்க வேண்டும். அதுவரை, டோல்கேட்டில் பாதி கட்டணம் வசூலிப்பது தொடர வேண்டும் என, உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் பச்சை சாத்தி சப்பரத்தில் சுவாமி வீதி உலா : திரளான பக்தர்கள் தரிசனம்
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 8:17:09 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் அடர்ந்த காடுகள் திட்டம் : ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 8:11:55 PM (IST)

காஷ்மீரில் பலியான வீரர்களுக்கு திருச்செந்தூரில் அஞ்சலி
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 8:06:21 PM (IST)

தூத்துக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 7:56:40 PM (IST)

தூத்துக்குடி வாக்கு எண்ணிக்கை மையம்: ஆட்சியர் ஆய்வு
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 7:45:43 PM (IST)

கூட்டணி வைப்பதற்காக நான் கட்சி ஆரம்பிக்கவில்லை : தூத்துக்குடியில் சீமான் பேட்டி
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 7:38:19 PM (IST)

RajaOct 13, 2018 - 03:32:31 PM | Posted IP 172.6*****