» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழக ஆளுநர் தூத்துக்குடி வருகை: ஆட்சியர் வரவேற்பு

வெள்ளி 12, அக்டோபர் 2018 8:12:57 AM (IST)



தூத்துக்குடிக்கு வந்த தமிழக ஆளுநருக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி அளவில் நெல்லையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி அரசு சுற்றுலா மாளிகைக்கு வருகை தந்தார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மாவட்ட எஸ்பி முரளி ரம்பா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர், காலை 10 மணியளவில் சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 

தொடர்ந்து 10-30 மணியளவில் தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். பின்னர் அரசு சுற்றுலா மாளிகையில் அதிகாரிகளுடன் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். மதியம் 1-30 மணி முதல் 3-30 மணி வரை பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறுகிறார். மாலையில் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். ஆளுநர் வருகையையொட்டி தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD



New Shape Tailors


Joseph Marketing

crescentopticals




Thoothukudi Business Directory