» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காசில்லாபரிவர்த்தனை மூலம் வரிகள் செலுத்தலாம் : தூத்துக்குடி மாநகராட்சி அறிவிப்பு

வியாழன் 11, அக்டோபர் 2018 6:35:22 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சிக்கு வரிகள் செலுத்த காசில்லா பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியானது ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்டதன் காரணமாக மாநகராட்சியின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக டிஜிட்டல் முறையில் காசில்லா பணபரிவர்த்தனை முறையினை பொதுமக்களிடத்தில் அறிமுகப்படுத்தும் வகையில் மாநகராட்சியால் திட்டமிடப் பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய வரியினங்களை காசில்லா பணபரிவர்த்தனை மூலம் செலுத்துவதற்கான வசதி மாநகராட்சி வரிவசூல் மையங்கள் அனைத்திலும் எஸ் பேங்க் மூலம் செயல்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி வரிவசூல் மையங்களில் எஸ் பேங்க் மூலம் ரொக்கம், காசோலை மற்றும் வரைவோலை தற்போதைய நவீன உலகில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அறிவுரை பணபரிமாற்ற முறைகளான QR code, Unified Payment Inter face, கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் Bharath Bill Payment system ஆகியவற்றின் மூலமாகவும் வரிவசூல் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, வருகின்ற 15.10.2018 முதல் எஸ் பேங்க் மூலம் மாநகராட்சி வரி வசூல் மையங்களை நவீனப்படுத்துதல் தொடர்பான பணிகள் துவங்கப்படவுள்ளது. எனவே பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள் மேற்படி சேவைகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர் ஆல்பி ஜான் வர்க்கீஸ்,தெரிவித்தார்.


மக்கள் கருத்து

nagarajOct 12, 2018 - 07:04:57 PM | Posted IP 141.1*****

வாழ்த்துக்கள்

காதர்Oct 12, 2018 - 11:06:55 AM | Posted IP 172.6*****

என்ன ஆனாலும் ரோடு மட்டும் போடமாட்டோம் - மாநகராட்சி

ஒருவன்Oct 12, 2018 - 12:35:09 AM | Posted IP 141.1*****

அது சரி.. ஆன்லைன் மூலமா பணம் செலுத்தும் வசதி பெற்றால் வீட்டில இருந்து செலுத்தலாம் ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu Communications


Joseph Marketing

New Shape Tailors


Nalam Pasumaiyagam

CSC Computer Education
Thoothukudi Business Directory