» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முறப்பநாட்டில் மஹாபுஷ்கரப் பெருவிழா தொடங்கியது : பக்தர்கள் புனித நீராடல்!!

வியாழன் 11, அக்டோபர் 2018 4:53:26 PM (IST)தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் மஹாபுஷ்கரப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. 
ஸ்ரீ தாம்ரபர்ணீஸ்வரம் அறநிலை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் மஹாபுஷ்கரப் பெருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக முறப்பநாடு நதிக்கரையில் பத்தாயிரம் சதுர அடியில் மிகப்பெரிய யாக சாலை பன்னிரெண்டாயிரம் சதுராடியில் அன்னதான அரங்கம் மற்றும் கலைஅரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. புஷ்கர விழாவின் தொடக்க நாளான இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். காலை 9.30 மணிக்கு முறப்பநாடு அன்னதான விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. 

பின்னர் அங்கிருந்து கயிலை வாத்தியம் முழங்க யாகசாலைக்கு ஊர்வலமாக விழா கமிட்டியினர் நடந்து வந்தனர். பிள்ளையார்பட்டி சோமசுந்தர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் 50 பேர் வேதங்கள் ஓத கணபதி ஹோமம் தொடங்கியது. தொடர்ந்து 11.00 மணிக்கு பூர்ணாகுதி நடந்தது. பின்னர் தீபாராதனை நடந்தது.  இதைத் தொடர்ந்து யாகசாலை மண்டபம் முன் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் மஹாபுஷ்கர விழா கொடியேற்றப்பட்டது. திருநெல்வேலி கணேச பட்டர் புஷ்கரவிழா கொடியை ஏற்றினார். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. பக்தர்கள் நீராட வசதியாக ஆற்றங்கரை படித்துறையில் தடுப்பு வேலிகள், முதியோர் மற்றும் பெண்கள் பாதுகாப்பாக நீராட ஆற்றுக்குள் கைப்பிடி அமைக்கப்பட்டுள்ளது.  இந்த வசதிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஆகியோர் பிற்பகலில் பார்வையிட்டனர். நாளை மறுநாள் காலை 9.00 மணிக்கு குடும்ப உறுப்பினர்கள் அமர்ந்து ஆகுதி அளித்து செய்யும் அமிர்த ம்ருத்யுஞ்சய ஹோமம் ஆரம்பமாகும். பன்னிரண்டு மணிக்கு பூர்ணாகுதியும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும். மாலையில் கலைநிகழ்ச்சிகளும் 5.30 மணிக்கு நதிஆரத்தியும் நடைபெறும். 

இந்த பூஜைகளை அனைத்தும் பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தாம்ரபர்ணீஸ்வரம் அறநிலை நிர்வாக அறங்காவலர் முத்துகுமார், அறங்காவலர்கள் கள்ளபிரான், பாலமுருகன், சுபத்ரா வெற்றிவேல், சரஸ்வதி மருதநாயகம் ஆகியோர் செய்திருந்தனர். திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தின் செயலாளர் சுவாமி சத்யானந்தா, மத்திய வியாபாரிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி, கமிட்டி உறுப்பினர்கள் ரமேஷ், மாரியப்பன், இளங்குமரன், செந்தில்ஆறுமுகம், சங்கரசுப்பிரமணியன், விஜயன், கௌரி ராஜசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.       


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam


CSC Computer EducationNew Shape Tailors

Joseph Marketing

Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory