» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில் கட்டுமான பணிக்கு ஸ்டெர்லைட் ரூ.10லட்சம் நிதியுதவி

வியாழன் 11, அக்டோபர் 2018 4:43:43 PM (IST)தூத்துக்குடி மாவட்டம் மடத்துபட்டி  பத்திரகாளியம்மன் கோவில் கட்டுமான பணிக்கு ஸ்டெர்லைட் நிறுவணம் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் பல்வேறு சமுதாய பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சமுதாய மம்பாடு, மகளிர் மேம்பாடு, கல்வி வளர்ச்சி உள்ளிட்ட பல பணிகளை தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வடக்கு சிலுக்கன்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட மடத்துபட்டி கிராமத்தில் அப்பகுதியினர் பத்திரகாளியம்மன் கோவில் அமைக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக நிதியுதவிகோரி ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையடுத்து கோவில் கட்டுமான பணிகளுக்காக ஸ்டெர்லைட் நிறுவனம் ரூ.10 லட்சம் வழங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று மடத்துப்பட்டியில் பத்திரகாளியம்மன்  கோவில் கட்டுமான பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது. இதில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் கலந்து கொண்டு அதன் அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், குமார வேந்தன், நாகராஜ் இஜாய்ஸ், நிஷின் ஆகியோர் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். இந்நிகழ்ச்சியில்  பத்திரகாளியம்மன்  கோவில் அமைப்பு நிர்வாக கமிட்டி தலைவர் துரைராஜ், செயலாளர் ராமானுஜம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் நிகழ்ச்சியில் ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள், பக்தர்கள், ஸ்டெர்லைட் நிறுவன ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD
crescentopticalsJoseph Marketing

New Shape TailorsThoothukudi Business Directory