» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உலக பெண் குழந்தைகள் தினம்: குட்டி தேவதைகளுக்கு மகுடம் சூட்டி மரியாதை

வியாழன் 11, அக்டோபர் 2018 4:20:21 PM (IST)



கோவில்பட்டியில் உலக பெண் குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு பெண் குழந்தைகளுக்கு ஆரத்தி எடுத்து, மகுடம் சூட்டி மரியாதை அளிக்கப்பட்டது. 

உலகம் முழுவதும் அக்டோபர் 11ந்தேதி உலகம் முழுவதும் பெண்குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் உலக பெண்குழந்தைகள் தின விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம், வட்டார குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் உலக பெண் குழந்தைகள் தின விழா பங்களாத் தெருவில் உள்ள  நகராட்சி ஆரம்ப பள்ளியில் வைத்து நடைபெற்றது. 

நகராட்சி ஆரம்பப்பள்ளி மாணவிகள் 75க்கும் மேற்பட்டோர்க்கு பூர்ணகும்ப மரியாதை அளித்து ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களுக்கு  ஆரத்தி எடுத்து நெற்றி திலகமிட்டு கிரிடம் அணிவித்து பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பாடுபடவும், பெண் குழந்தைகளுக்கு எதிரான செயல்களை தடுத்து நிறுத்தவும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இவ்விழாவிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் பாபு தலைமை வகித்தார், பள்ளி தலைமை ஆசிரியை ராஜசரஸ்வதி, ரோட்டரி சங்க செயலாளர் ரவிமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் சாந்தி அனைவரையும் வரவேற்றார்.

வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சண்முகசுந்தரி கலந்து கொண்டு பெண் குழந்தைகளுக்கு கிரிடம் அணிவித்து பேசினார்.விழாவில் ரோட்டரி இன்ட்ராக்ட் சேர்மன் கண்ணன், ரோட்டரி சங்க பொருளாளர் பால்ராஜ், உறுப்பினர்கள் முத்துமுருகன், பிரபாகரன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் பொன்இசக்கி பள்ளி ஆசிரியர்கள் வசந்தகுமாரி, கலைவாணி உள்ளிட்ட பெற்றோர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் பள்ளி ஆசிரியை தேவிகா நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Joseph Marketing

New Shape Tailors





Thoothukudi Business Directory