» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆளுனர் வருகை: அவசர கதியில் சாலைகள் சீரமைப்பு

வியாழன் 11, அக்டோபர் 2018 12:13:00 PM (IST)



தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் பிரதான சாலைகள் அவசரம், அவசரமாக சரி செய்யப்பட்டு வருகிறது.

தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், இன்று மாலை துாத்துக்குடிக்கு பொதுமக்களிடம் மனுக்கள் பெற வருகை தர உள்ளார். எனவே ஆளுனர் வருகையை முன்னிட்டு துாத்துக்குடியின் பிரதான சாலைகளான பாளையங்கோட்டை ரோடு, டபிள்யூசிஜி ரோடு, பீச் ரோடு உள்ளிட்ட சாலைகளில் இருந்த மேடு பள்ளங்கள், குழிகள் எல்லாம் அவசர கதியில் சரி செய்யப்பட்டு வருகின்றன.  ஆளுநர் வருகையை முன்னிட்டு பிரதான சாலைகளில் உள்ள வேகத் தடைகள் அகற்றப்பட்டுள்ளது. 

மேலும் சாலையின் மேல் ஒட்டு போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை பார்த்த அவ்வழியே சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தூத்துக்குடியின் பிரதான சாலைகள் அனைத்தும் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பாக  போடபட்டது என்றும், அதன் பின்னர் புதிய சாலைகள் போடவோ, அதை செப்பனிடும் பணிகளோ மேற்கொள்ளவில்லை. ஆனால் இன்று ஆளுனர் வருகையை முன்னிட்டு அவசரம், அவசரமாக சரி செய்யப்படுகிறது. இந்த சாலையும் எத்தனை நாள்கள் தாக்குபிடிக்குமோ என்று தெரிவித்தனர்.



மக்கள் கருத்து

வடிவேல்Oct 12, 2018 - 03:59:22 PM | Posted IP 162.1*****

தண்ணீர்ல பூச்சி இருந்தால் அபராதம் போடும் கலெக்டர் எ இந்த தர மட்ட ரோடு போடுறவனன் மேல அபராதம் போடுவியா?

RAJKUMAROct 11, 2018 - 01:24:58 PM | Posted IP 162.1*****

மாதம் ஒரு முறை வருக ஆளுநர் அவர்களே............

ராஜ்குமார்Oct 11, 2018 - 01:24:24 PM | Posted IP 162.1*****

மாதம் ஒரு முறை வருக ஆளுநர் அவர்களே............

ஆப்Oct 11, 2018 - 01:10:40 PM | Posted IP 172.6*****

indha தமிழ் நாட்டுல என்ன நடக்குதுன்னே சில நேரங்களில் புரியுறது இல்ல.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications

CSC Computer Education

Nalam Pasumaiyagam

Joseph Marketing

New Shape Tailors





Thoothukudi Business Directory