» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாதிக்கொடி, ஆயுதங்களுடன் குலசை வரும் பக்தர்கள் : எஸ்பி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!

வியாழன் 11, அக்டோபர் 2018 10:22:06 AM (IST)குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு சாதிக்கொடி, ஆயுதங்களுடன் வருபவர்களை தடுக்க தூத்துக்குடி மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற தசரா விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு தமிழகத்தின்  பல பகுதிகளிலிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் லாரி, வேன் உள்ளிட்ட பல்வேறு பல்வேறு வாகனங்களில் மாலை அணிவித்து காப்பு அணிவிப்பதற்காக வந்திருந்தனர்.  இந்தநிலையில்  பல்வேறு குழுக்களாக வந்திருந்த பக்தர்களிடத்தில் கரகோசம் எழுப்புவதிலும், சாமி ஆடுவதிலும் தகராறு ஏற்பட்டுள்ளது.  

அப்போது பக்தர்கள் தாங்கள் கொண்டுவந்திருந்த ஈட்டி,  வாள், அரிவாள் உள்ளிட்ட இரும்பினால் ஆன ஆயுதங்களால் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.  இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வேடம் அணியும் பக்தர்கள் வேடத்துக்கு ஏற்ப டம்மி ஆயுதங்களை வைத்திருப்பது வழக்கம். ஆனால் மோதலில் ஈடுபட்டவர்கள் இரும்பாலான வாள், வேல், திரிசூலம், அரிவாள் உள்ளிட்டவற்றை கொண்டு வெட்டவும் , குத்தவும் பாய்ந்ததால் உடன் சென்ற பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டாலும், அங்கிருந்த மற்ற பக்தர்கள் மோதலில் ஈடுபட்டவர்களை அமைதிப்படுத்தி அனுப்பி வைத்தனர். தசரா திருவிழாவை பொறுத்தவரை, ஜாதி ரீதியாக பல்வேறு குழுக்களாக பிரிந்துள்ள பக்தர்கள் கோவிலுக்கு வரும் போது பிரச்சனை எழுகிறது. மேலும், ஈட்டி  உள்ளிட்ட  ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்றும் சாதி அமைப்பை வெளிப்படுத்தக்கூடிய உடை,  கொடி உள்ளிட்டவைகளையும் சாதி உணர்வை தூண்டும் கோசங்களை எழுப்பக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருவிழா நாட்களில் இதை முறையாக கடைப்பிடிப்பதற்காக எந்தவிதமான நடவடிக்கைகளையும் கடைப்பிடிப்பதில்லை. இதனால் தசரா திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே  இதுபோன்று ஆயுதங்களால் வரும் பக்தர்களை முறையான இடத்தில் தடுத்து நிறுத்தி இதுபோன்ற மோதல்கள் ஏற்படாத வகையில் உரிய தூத்துக்குடி மாவட்ட எஸ்பி முரளி ரம்பா நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

வடிவேல்Oct 12, 2018 - 04:03:01 PM | Posted IP 172.6*****

ஒரிஜினல் கத்தி வைத்து இருப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும்.

வடிவேல்Oct 12, 2018 - 04:02:31 PM | Posted IP 172.6*****

கூடிய விரைவில் பல பிரச்சனைகள் வரும் போல. இதற்க்கு நிறைய கட்டு பாடுகள் வேண்டும். ஏன் ஒரிஜினல் கத்தி பயன் படுத்து கிறார்கள்.

ராஜாOct 11, 2018 - 11:34:20 AM | Posted IP 162.1*****

Sp sr please take action....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Anbu CommunicationsNew Shape Tailors

Joseph Marketing

Black Forest Cakes

CSC Computer Education
Thoothukudi Business Directory