» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாயமான 19 மீனவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் : ஆட்சியர் பேட்டி

ஞாயிறு 7, அக்டோபர் 2018 6:05:38 PM (IST)கடலில் மீன்பிடிக்க சென்றபோது மாயமான 19 மீனவர்களை மீட்க கடலோர காவல்படை, கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தேடும் பணி நடந்து வருவருவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

திருச்செந்தூர் - வீரபாண்டியன்பட்டணம் மெயின்ரோட்டில் சிவந்தி அகடாமி வளாகத்தில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் கட்டுவதற்கு அரசால் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மணி மண்டபம் கட்டுவதற்கு வரும் 10ம் தேதி தமிழக முதல்வர் பழனிச்சாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் அடிக்கல் நாட்டுகிறார். இந்நிலையில் மணி மண்டபம் கட்டப்பட உள்ள இடத்தை ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று ஆய்வு செய்தார். அதற்கான வரைபடத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடியில் கடந்த ஆண்டு நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என அறிவித்தார். அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு மணி மண்டபம் கட்டுவதற்கு ஒரு கோடி ரூபாய் 34 லட்சத்து 74 ஆயிரம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. 

திருச்செந்தூர் - வீரபாண்டியன்பட்டணம் மெயின்ரோட்டில் மணி மண்டபம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் 10ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தூத்துக்குடி மாவட்டத்தில கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் ரெட் அலர்ட்டை இந்திய வானிலைம மையம் வாபஸ் பெற்றுள்ளது. இருந்தாலும் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 115 விசைபடகுகளில் ஆழமான பகுதியில் மீன்பிடித்தொழிலுக்கு செல்வது வழக்கம். 

இந்த மீனவர்கள் கேரளா பகுதியில் மீன்பிடித்து வந்தார்கள். இந்த மீனவர்களை தொடர்பு கொண்டு திரும்பி வர எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். இதில் 2 விசைபடகுகளில் சென்ற 19 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. அவர்களை தொடர்பு கொள்ள முயன்ற போது தகவல் தொடர்பு கிடைக்கவில்லை. கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவர்கள் மீன்பிடித்த கொண்டிருந்த இடம் மற்ற மீனவர்கள் மூலம் தெரியவந்தது. எனவே இந்த மீனவர்களை மீட்ப்பதற்கு இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்துள்ளேன். இவர்கள் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் அந்த மீனவர்கள் இருக்கும் இடத்தை தெரிந்துகொள்ள முயற்சி நடந்து வருகிறது. இன்று மாலைக்குள்(இன்று) மீனவர்களின் இடத்தை கண்டுபிடித்து விரைவில் மீட்கப்படுவார்கள்.

திருநெலவேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் அக். 11ம் தேதி முதல் 22ம் தேதிவரை தாமிரபரணி புஷ்கர விழா நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 60 கி.மீ., தாமிரபரணி ஆறு ஓடுகிறது. இதில் பக்தர்கள் புனித நீராடுவதாக முக்கியமான இடங்களாக 6 பகுதிகளை கண்டறிந்துள்ளோம். இந்த பகுதியில் பக்தர்களுக்கு தேவையான தங்கும் இடம், கழிப்பறை, மருத்துவம், சுகாதாரம், ரோடு வசதிகள் மற்றும் படகு மூலம் கண்காணிப்பு பணி, தீயணைப்பு மீட்பு படையினர் மற்றும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதனை தவிர 26 இடங்களுக்கு பக்தர்கள் வருவார்கள் என தெரியவந்துள்ளது. அங்கு பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். உரிய பாதுகாப்பு வசதிகளும் செய்து கொடுக்க உள்ளோம். இவ்வாறு ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் ஆர்.டி.ஒ., கோவிந்தராசு, தாசில்தார் தில்லைபாண்டி, மண்டல துணை தாசில்தார் கோமதிசங்கர், தூத்துக்குடி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுகுமார், ஜூனியர் இன்ஜினியர் கணேசன், டவுன் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி மனோரஞ்சிதம், பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்(பஞ்சாயத்து) மோகன், ஆதித்தனார் கல்வி நிறுவன மானேஜர் வெங்கட் ராமராஜன், ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மகேந்திரன், வருவாய் இன்ஸ்பெக்டர் மாரியம்மாள், வி.ஏ.ஒ., செல்வலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing


crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors


Thoothukudi Business Directory