» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை : கனமழை காரணமாக ஆட்சியர் அறிவிப்பு

வெள்ளி 5, அக்டோபர் 2018 7:27:00 AM (IST)

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். 

லட்சத்தீவுப் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள் அனேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

அதன்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடியில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

RajaOct 5, 2018 - 07:32:54 AM | Posted IP 162.1*****

Good Right time right message We appreciate your good response Tks

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing




crescentopticals

New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory