» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் செப்.25 முதல் 27 வரை 144 தடை உத்தரவு அமல்: ஆட்சியர் அறிவிப்பு

திங்கள் 24, செப்டம்பர் 2018 5:39:10 PM (IST)

என்.வெங்கடேஷ் பண்ணையாரின் 15வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 25.09.2018 மாலை 6.00 மணி முதல் 27.09.2018 காலை 6.00 மணி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், அம்மன்புரம் கிராமத்தில் 26.09.2018 அன்று என்.வெங்கடேஷ் பண்ணையாரின் 15வது நினைவு தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திடவும், 25.09.2018 மாலை 6.00 மணி முதல் 27.09.2018 காலை 6.00 மணி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி மேற்படி தினங்களில் பொதுமக்கள் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடுவதற்கும், வாள், கத்தி, கம்பு, கற்கள் மற்றும் இதர அபாயகரமான, ஆட்சேபகரமான ஆயுதங்கள் கொண்டு வருவதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து பொதுமக்களை அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாக மேற்படி நினைவு தினத்திற்கு கலந்து கொள்ள அழைத்து வருவதற்கும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

இத்தடை உத்தரவு பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள்இ தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு பொருந்தாது. மேற்படி தினங்களில் அமைதியை நிலைநாட்ட மாவட்ட காவல் துறையின் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேற்படி நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடத்தவிருப்பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை அணுகி அனுமதி பெற்றுக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இத்தடையுத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்குப் பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals



Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors




Thoothukudi Business Directory