» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை ஆய்வுக்குழு பார்வை

சனி 22, செப்டம்பர் 2018 7:12:20 PM (IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி தருண் அகர்வால் குழுவினர் ஸ்டெர்லைட் ஆலை தாமிர கழிவு கொட்டப்பட்டுள்ள புதுக்கோட்டை உப்பாறு ஒடைபகுதியை நேரில் சென்று பார்வையிட்டனர். 

தூத்துக்குடி, ஸ்டெர்லைட் நிறுவனத்தின் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவுப்படி 28.05.2018 அன்று சீல் வைக்கப்பட்டது. வேதாந்தா நிறுவனம் மேற்கண்ட உத்தரவுகளுக்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயம முதன்மை அமர்வு, புது டெல்லி முன்பாக மேல் முறையீடு செய்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தனது உத்தரவில், இது குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற மேகலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அலகபாத் உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால், மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், இந்திய அரசு, புது டெல்லியின் சதிஷ் கர்ஹோட்டி,  மற்றும், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம்; தென் மண்டலத்தின் முதுநிலை சுற்றுச்சூழல் பொறியாளர்  வரலட்சுமி ஆகியோர் அடங்கிய குழுவினை அமைத்துள்ளது. 

இக்குழுவினர் இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்தனர். தொடர்ந்து புதுக்கோட்டை உப்பாறு ஒடை பகுதியில் ஸ்டெர்லைட் ஆலையின் தாமிர கசடு கழிவுகள்  கொட்டப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டனர். இந்த ஆய்வின் போது, துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, எஸ்பி., முரளி ரம்பா , சார் ஆட்சியர் பிரசாந்த் மாவட்ட ,வருவாய் அலுவலர் வீரப்பன், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர், செயலர் சேகர், இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர்கள் (தலைமையகம்)கண்ணன், மனோகரன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லெவிங்டன் மற்றும் மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அலுவலர்கள் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticalsNew Shape TailorsJoseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory