» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆய்வுக்குழு வருகை: போலீஸ் குவிப்பு

சனி 22, செப்டம்பர் 2018 5:23:23 PM (IST)

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஸ்டெர்லைட் ஆலை குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த குழு நாளை மக்களிடம் கருத்து கேட்க உள்ளதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்பட்டுள்ளது. 

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான மூவர் குழுவினர், ஆலையை ஆய்வு செய்ய இன்று மாலை துத்துக்குடி வந்தனர். இன்று மாலையில் இக்குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாளை (ஞாயிறு) காலை 11.30 மணியளவில் அரசு பாலிடெக்னிக்கில் குழுவினர் பொதுமக்களிடம் கருத்துக் கேட்கிறார்கள்.

இதில், ஸ்டெர்லைட் ஆலை குறித்து பொதுமக்கள் தங்கள் புகார்களை எழுத்துப் பூர்வமாகவோ, அல்லது அதிகாரிகளை நேரில் சந்தித்து வாய்மொழியாகவோ தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காவல்துறை சார்பில்  பலத்த  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக ஒரு ஏடிஎஸ்பி, 3 டிஎஸ்பி, 10 இன்ஸ்பெக்டர்கள், 80 பட்டாலியன் போலீசார், 104 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.  மேலும், 2 வஜ்ரா வாகனங்கள், அதிவிரைவுப் படை வாகனங்களும் அங்கு வரவழைக்கப்ட்டுள்ளன.


மக்கள் கருத்து

தூத்துக்குடிகாரன்Sep 22, 2018 - 10:20:37 PM | Posted IP 172.6*****

ஒரு ஏடிஎஸ்பி, 3 டிஎஸ்பி, 10 இன்ஸ்பெக்டர்கள், 80 பட்டாலியன் போலீசார், 104 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், 2 வஜ்ரா வாகனங்கள், அதிவிரைவுப் படை வாகனங்களும் அங்கு வரவழைக்கப்ட்டுள்ளன............ எதற்கு ??????....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals

Joseph Marketing
New Shape Tailors

Thoothukudi Business Directory