» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு : ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழு வலியுறுத்தல்

சனி 22, செப்டம்பர் 2018 12:42:43 PM (IST)தூத்துக்குடியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழு வலியுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்குழுவைச் சார்ந்த வழக்கறிஞர் விமல் ராஜேஷ், மற்றும் ஸ்டீபன் தாஸ், துரைபாண்டியன் ஆகியோர் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய குழுவினர் தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொள்ள தூத்துக்குடி வருகை தரஉள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தி, அந்த ஆலை  அகற்றப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. 

அதே நேரத்தில், அந்த ஆலை மூடப்பட்ட பின்னரும் அனல்மின் நிலைய பகுதிக்கு உட்பட்ட இடங்கள் பலவற்றில் காற்றுடன் மாசு புகைமண்டலம் படிந்து துர்நாற்றத்துடன் மக்கள்  சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அப்படியென்றால் சுற்றுச்சூழல் மாசடைய இன்னும் பல தொழிற்சாலைகள் காரணமாக உள்ளது என்றே கருத வேண்டியுள்ளது. எனவே, மத்திய ஆய்வுக்குழுவினர் தூத்துக்குடியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டால்தான் மாசற்ற மற்றும் மக்கள் சுகாதாரமாக வாழக்கூடிய சுற்றுச்சூழல் ஏற்படும். 

நம் தூத்துக்குடி மக்களின் நோக்கம் மாசுகழிவுகள் அறவே இல்லாத நகரமாக மனிதர்கள் வாழத் தகுதியான நகரமாக இருக்க வேண்டும் என்பதுதான். மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியம் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. எனவே, மத்தியக்குழுவினர் முறையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். துப்பாக்கிச்சூட்டில் பலியான 13பேரின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்றால் தூத்துக்குடி நகரின் நிலம், நீர், காற்று அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி நாங்கள் மத்திய ஆய்வுக்குழுவிடம் மனு அளிக்கவுள்ளோம் என்று தெரிவித்தனர். 


மக்கள் கருத்து

சிவராம்Sep 23, 2018 - 10:23:51 PM | Posted IP 162.1*****

சரியான பேச்சு. இது தான் இன்றைய தூத்துக்குடியின் நிலை.

JawaharSep 23, 2018 - 02:00:35 PM | Posted IP 162.1*****

Need proper long term assessment and understanding on carrying capacity. Both water and air highly pollution reached more than its capacity. Planning needed to reduce pollution level. Hope the inspection team understand the impact as well as reduce the stored pile of waste. Heavy metal pollution........

IndianSep 22, 2018 - 06:15:12 PM | Posted IP 141.1*****

To satisfy the above people, all the industries in Tuticorin and port should be closed.

BrabhuSep 22, 2018 - 03:15:49 PM | Posted IP 172.6*****

Sterlite copper not polluting.they are following world class best technology.

கணேஷ்Sep 22, 2018 - 02:39:38 PM | Posted IP 141.1*****

வரவேற்தக்கது நண்பர்களே. இது அந்த போரளிகளுக்கு தெரிந்த 2ங்கள நீக்கிடுவாங்களே....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph MarketingFriends Track CALL TAXI & CAB (P) LTD
crescentopticals

New Shape TailorsThoothukudi Business Directory